பேடிஎம் பங்குகள் 73.66 சதவீதம் சரிவு.. ஐபிஓ முதலீட்டாளர்கள் ரத்தக்கண்ணீர்..!!

பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் மீதான ரிசர்வ் வங்கியின் தடையை தொடர்ந்து பங்குச்சந்தையில் பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி அடைந்து வருகின்றன.

பேடிஎம் நிறுவனத்தின் one97 communication-இன் ஒரு பங்கின் விலையானது இதுவரை இல்லாத அளவாக 342.35 ரூபாய் என்ற 52 வார கால வீழ்ச்சியை கண்டுள்ளது. வர்த்தக நாளில் பேடிஎம் பங்கின் விலை 355 ரூபாயாக இருந்தது இது 360 ரூபாய் வரை உயர்ந்து பின்னர் 342.15 ரூபாய் என சரிந்தது.

பேடிஎம் பங்குகள் 73.66 சதவீதம் சரிவு.. ஐபிஓ முதலீட்டாளர்கள் ரத்தக்கண்ணீர்..!!

இதேவேளையில் ஆர்பிஐ அறிவிப்பு வெளியான ஜனவரி 31ஆம் தேதி பேடிஎம் பங்குகள் 761.20 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 342.35 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இந்த இடைப்பட்ட 14 நாட்களில் பேடிஎம் பங்குகள் 73.66 சதவீதம் சரிவடைந்துள்ளது.

ஒரே நாளில் பேடிஎம்-மின் பங்குகள் சுமார் 9 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் தடை அறிவிப்பினை தொடர்ந்து ஏராளமான முதலீட்டாளர்கள் வந்த விலைக்கு பங்கினை விற்கின்றனர், இதனால் அதன் விலை தொடர்ந்து சரிவிலேயே இருந்து வருகிறது.

பேடிஎம் ஐபிஓ: டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மற்றும் யுபிஐ பயன்பாட்டில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக வளர்ச்சி அடைந்த பேடிஎம், கடந்த 2021ஆம் ஆண்டு ஐபிஓ அறிவித்தது. அந்த ஆண்டில் வெளியிடப்பட்ட மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஓக்களில் ஒன்றாக இது இருந்தது.

பேடிஎம் பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலான முதல் நாளே 27% சரிந்தது. இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் படிப்படியாக பங்கின் விலை அதிகரிக்க தொடங்கியது. பேடிஎம் பங்குகளின் ஐபிஓ வெளியிட்டு விலை 2150 ரூபாய், ஆனால் பட்டியலிடப்பட்டது 1950 ரூபாய்.

இந்த ஐபிஓ-வில் ஒரு முதலீட்டாளர் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்து 1950 ரூபாய் வீதம் 51 பங்குகளை வாங்கியிருந்தால் தற்போது இதன் இன்றைய விலையில் வெறும் 17449.65 ரூபாய் மட்டுமே.

ரிசர்வ் வங்கி தடையால் வந்த தலைவலி: பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் முறைகேடில் ஈடுபடுவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த இந்திய ரிசர்வ் வங்கி, கடந்த ஜனவரி 31ஆம் தேதி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பின்னர், பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் செயல்பாட்டுக்கு முழு தடை விதிக்கப்படுவதாக அறிவித்தது.

இதனால் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பேடிஎம் வாலெட், பேடிஎம் பாஸ்டேக், பேடிஎம் என்எம்டிசி கார்டுகள் ஆகியவற்றை பயன்படுத்த முடியாது என்பதால் வாடிக்கையாளர்கள் வேறு தளங்களுக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் செயல்பாட்டிற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்ததை தொடர்ந்து பங்குச்சந்தையில் அந்த நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக சரிந்து வருகின்றன.

இன்று ஒரே நாளில் பேடிஎம் பங்கின் விலை 9 விழுக்காடு சரிந்து 52 வார கால சரிவான 342.15 ரூபாய்க்கு வந்தது. ஒரு வார காலத்தில் மட்டும் பேடிஎம் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 25.70 விழுக்காடு குறைந்துவிட்டது.

ஒரு மாத காலத்தில் சுமார் 50 விழுக்காடு விலை வீழ்ச்சி அடைந்திருப்பதால் முதலீட்டாளர்கள் பெரும் கலக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். ரிசர்வ் வங்கியின் தடை அறிவிப்பு வந்த பின்னர் மட்டும் 761 ரூபாயில் இருந்த ஒரு பங்கின் விலை 342 ரூபாய்க்கு சரிந்துள்ளது.

இதனிடையே தரகு நிறுவனமான மேக்குவாரி பேடிஎம் பங்கின் மதிப்பீட்டை குறைத்துள்ளது. எனவே அடுத்தடுத்த நாட்களில் இது சந்தையில் எதிரொலிக்கும் என தெரிகிறது.

Story written by: Devika Manivannan

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+