நாட்டின் மிகப்பெரிய பொது பங்கு வெளியீடான பேடிஎம்-மின் பங்கு வெளியீட்டு மதிப்பு 18,300 கோடி ரூபாயாகும். இப்படி மாபெரும் ஐபிஓ-வினை செய்த இந்த நிறுவனம், முதல் நாளே முதலீட்டாளர்களின் அதிருப்தியை கண்டுள்ளது.
பேடிஎம் பங்கு வெளியீட்டில் விலை நிர்ணயமானது, ஒரு பங்கிற்கு 2,080 ரூபாய் முதல் 2,150 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட இதன் விலை தொடக்கத்தில் பி.எஸ்.இ-ல் 1955 ரூபாயாக தொடங்கியது.
இது வெளியீட்டு விலையானது 2150 ரூபாயில் இருந்து 9.07% சரிவில் காணப்பட்டது.
பேசிஎம் மதிப்பு
அறிமுகத்தில் பேடிஎம் பங்குகள் சரிவினை கண்ட நிலையில், இந்த நிறுவனம் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பினை எட்டியது குறிப்பிடத்தக்கது.
அதெல்லாம் சரி? ஏன் இந்த பெரும் சரிவு? அதுவும் முதல் நாளே இந்தளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது ஏன்? ஆய்வாளர்களின் கருத்து என்ன வாருங்கள் பார்க்கலாம்.
முக்கிய காரணம்
இந்த நிறுவனம் இன்னும் சம்பாதிக்கவே ஆரம்பிக்கவில்லை. இன்னும் நஷ்டத்தில் தான் இருந்து வருகின்றது. மேலும் சந்தையில் அதிக விலை கொண்ட ஒரு பங்காக வெளியிடப்பட்டது. இதுவும் ஆரம்பத்திலேயே சரிவுக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. மேலும் எதிர்கால வருவாய் விகிதத்தினை கருத்தில் கொண்டு, இந்த பங்கு விலையானது நிர்ணயம் செய்யப்பட்டது.
பேடிஎம் திசை இல்லாதது?
பேடிஎம் பிசினஸ் மாடலானது கவனம் மற்றும் திசை இல்லாதது. இது லாபத்தினை அடைவது மிக கடினமான ஒரு விஷயமாக உள்ளது.
இந்த நிலையில் தான் பங்கு வெளியீட்டின் மூலம் இந்த நிறுவன, 18,300 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிட்டிருந்தது. இதில் 8,300 கோடி ரூபாய் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் திரப்பட்டது. மீதம் உள்ள 10,000 கோடி ரூபாய் அதன் நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளார்களிடம் இருந்தும் விற்பனை செய்யப்பட்டது.
பேடிஎம் நிறுவனரின் கருத்து?
பேடிஎம் இன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட நிலையில், அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான விஜய் சேகர் ஷர்மா, இந்த நாள் எங்களுக்கான நாள். இன்று பங்கு சந்தையில் இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓவாக பட்டியலிடப்பட்டிருக்கிறது என உணர்ச்சிபூர்வமாக பேசியுள்ளார்.
பேடிஎம் நிலவரம்?
இன்று காலையில் பட்டியலிடப்பட்ட நிலையில் சரிவில் தொடங்கிய நிலையில், முடிவில் என்.எஸ்.இ-யில் 27.40% சரிவினைக் கண்டு, 1560.80 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
இதே பிஎஸ்இ-ல் 27.25% சரிவினைக் கண்டு, 1564.15 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
பிஎஸ்இ-ல் இன்றைய உச்சம் 1961.05 ரூபாயாகவும், இன்று குறைந்தபட்ச விலை 1564 ரூபாயாகும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications