இந்திய பங்குச்சந்தையின் மந்தமான போக்கையும் தாண்டி, பிசி ஜூவல்லர் (PC Jeweller) 2026ஆம் ஆண்டில் இதுவரை 8% வருமானம் அளித்து, சென்செக்ஸ் குறியீட்டை மிஞ்சியுள்ளது. சென்செக்ஸ் குறியீடு இந்த ஆண்டு தொடக்கம் முதல் 3.16% வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் பிசி ஜூவல்லர் பங்கு 8% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 235% லாபம் ஈட்டியுள்ள இந்நிறுவனத்தின் எழுச்சியை, துறைசார் வளர்ச்சியை விட, நிறுவனத்தின் மீட்சிப் பயணமாகவே சந்தை வல்லுநர்கள் பார்க்கின்றனர்.
புதன்கிழமை வர்த்தகத்தில், பிசி ஜூவல்லர் பங்கு 0.70% சரிந்து ரூ10.01க்கு முடிந்தது. அதற்கு முந்தைய செவ்வாய்க்கிழமை, அப்பங்கு 1%க்கும் மேல் உயர்ந்து, மூன்று நாள் சரிவை முடிவுக்குக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. நீண்டகால நிதி நெருக்கடிக்குப் பிறகு, கடந்த ஓராண்டாக பிசி ஜூவல்லர் தனது நிதிநிலையை சீரமைத்தல், கடன் குறைப்பு ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தியதே பங்கின் எழுச்சிக்குக் காரணம் என்கிறார் இன்வெஸ்ட் பிஎம்எஸ் (INVasset PMS) வர்த்தகப் பிரிவுத் தலைவர் ஹர்ஷல் தசானி.

பிசி ஜூவல்லரின் 2026 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு வணிக அறிக்கை வலுவான வளர்ச்சியைக் காட்டியது. விரைவில் கடன் இல்லாத நிறுவனமாக மாறும் என்னும் நம்பிக்கையை முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த பங்கினை வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இக்காலகட்டத்தில், வரிக்குப் பிந்தைய லாபம் (PAT) 28% அதிகரித்து, 2025 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ146 கோடியிலிருந்து ரூ187 கோடியாக உயர்ந்துள்ளது.
பண்டிகை, திருமணக் காலங்களில் நகை விற்பனை அதிகரித்தது நிறுவனத்தின் செயல்பாட்டுக்கு வலு சேர்த்தது. Standalone revenue ஆண்டுக்கு ஆண்டு 37% அதிகரித்து, 2025 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ 639 கோடியிலிருந்து ரூ875 கோடியாக உயர்ந்தது. இது நீடித்த தேவையும், பயனுள்ள விற்பனையும் சுட்டிக்காட்டுகிறது.
பங்கு விலை உயர்வுக்கு தங்கத்தின் விலை ஏற்றம் ஒரு முக்கியக் காரணம். இது நகைக்கான தேவையை உணர்வுபூர்வமாக ஆதரித்தாலும், லாப வரம்புகள் மூலதனச் சுழற்சிகளால் பாதிக்கப்படக்கூடியவை என தசானி குறிப்பிட்டார். கடந்த ஆண்டில் தங்கம் 70% உயர்ந்ததுடன், இந்த ஆண்டு நிலவரப்படி 20% உயர்ந்து உள்ளது. தசானி, நிறுவனத்தின் நிதி மீட்சி ஊக்கமளிக்கிறது. வருவாய் வளர்ச்சியும், லாப வரம்பு நிலைத்தன்மையும் பல காலாண்டுகளுக்குத் தொடர்ந்தால் வலுப்பெறும் என்கிறார்.
பிசி ஜூவல்லர் பங்கை வாங்க இது சரியான நேரமா? என்றால் முதலீட்டாளர்கள் பணப்புழக்கத்தில் நிலைத்தன்மை, கடன் குறைப்பு, ஆடிட்டர்களின் நம்பகத்தன்மை ஆகியவற்றை ஆராய வேண்டும் என்கிறார் தசானி. "இது மீட்சியடையும் கதைதான், நிலையான வளர்ச்சி இன்னும் எட்டப்படவில்லை" என்று அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், இந்த மல்டிபேக்கர் பென்னி ஸ்டாக்கின் தொழில்நுட்பப் பார்வையை ஆய்வு செய்த லக்ஷ்மிஸ்ஸ்ரீ (Lakshmishree) நிறுவனத்தின் ஆராய்ச்சித் தலைவர் அன்ஷுல் ஜெயின், பிசி ஜூவல்லர் பங்கு மாதாந்திர விளக்கப்படத்தில் (monthly chart) ரூ10.5 என்ற முக்கியத் திருப்புமுனை நிலையை வெற்றிகரமாக மறுபரிசோதனை செய்துள்ளதாகத் தெரிவித்தார். கடந்த நான்கு மாதங்களாக, அப்பங்கு மீட்கப்பட்ட ஆதரவு நிலைக்குள்ளேயே நிலைப்படுத்தப்பட்டுள்ளது என்கிறார். எனவே முதலீட்டாளர்கள் சிறிது காலம் காத்திருந்து முதலீடு செய்ய அறிவுரை வழங்குகிறார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications