ஆதித்யா விஷன் லிமிடெட் நிறுவனம் எலக்ட்ரானிக் பொருட்களின் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இது பீகாரில் சேவை சார்ந்த எலக்ட்ரானிக் சில்லறை சங்கிலித்தொடர் நிறுவனமாகும். இந்நிறுவனம் சிறப்பான வர்த்தக வளர்ச்சி மற்றும் வலுவான நிதி நிலைமை கொண்டுள்ளது. மேலும், இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் இந்நிறுவன பங்கின் மீது எப்போதும் ஒரு கண் வைத்துள்ளனர்.
ஆதித்யா விஷன் லிமிடெட் நிறுவனம் 2024 செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.12.21 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 26.8 சதவீதம் அதிகமாகும். 2023 செப்டம்பர் காலாண்டில் ஆதித்யா விஷன் லிமிடெட் நிறுவனம் நிகர லாபமாக ரூ.9.63 கோடி ஈட்டியிருந்தது.

2024 செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.375.85 கோடி ஈட்டியுள்ளது. இது 2023 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 20 சதவீதம் வளர்ச்சியாகும். அந்த காலாண்டில் இந்நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.313.13 கோடி ஈட்டியிருந்தது.
நீண்ட கால அடிப்படையில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயம் கொடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ஆதித்யா விஷன் பங்கு விலை 14,270.11 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இப்பங்கின் விலை வெறும் ரூ.2ஆக இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.408.05ஆக இருந்தது.
5 வருடங்களுக்கு முன் இந்த பங்கில் ஒருவர் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால், அது இன்று ரூ.2.04 கோடியாக உயர்ந்திருக்கும். 2024 செப்டம்பரில் மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை 52 வார புதிய உச்சமான ரூ.574.95ஐ எட்டியது குறிப்பிடத்தக்கது.
நீண்ட கால அடிப்படையில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயத்தை கொடுத்தாலும், குறுகிய கால அடிப்படையில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத்தான் கொடுத்துள்ளது. உதாரணமாக, கடந்த ஒரு மாதத்தில் இப்பங்கின் விலை 15.33 சதவீதம் சரிந்தது.
கடந்த 6 மாதத்தில் இப்பங்கின் விலை 2.66 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆதித்யா விஷன் நிறுவனம் தனது பங்குகளை 1:10 என்ற விகிதத்தில் பங்கு பிரிப்பு செய்தது. அதாவது ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒரு பங்கினை தலா ரூ.1 முகமதிப்பு கொண்ட பத்து பங்குகளாக பிரித்தது.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications