முன்னணி ஐடி நிறுவனமான 'ப்ளூ கிளவுட் சாஃப்டெக் சொல்யூஷன்ஸ்' (Blue Cloud Softech Solutions Ltd) அதன் பங்குதாரர்களுக்கு ஒரு சிறப்பு பம்பர் சலுகையை அறிவித்துள்ளது. நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு சமீபத்திய கூட்டத்தில் 1:2 என்ற விகிதத்தில் பங்குகளை பிரிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் ஒருபகுதியாக, பதிவு தேதிக்கு முன் வாங்கப்படும் 1 பங்கு 2 பங்குகளாக பிரிக்கப்படும்.
இது தவிர, இந்த பங்கு அதன் முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை அளித்துள்ளது. அதன்படி இந்த பங்கில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் அது ரூ.8 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ப்ளூ க்ளவுட் சாஃப்ட் டெக் சொல்யூஷன்ஸ் பங்கு ரூ.100க்குக் குறைவான விலையில் உள்ள ஒரு பென்னி பங்கு ஆகும். இனி இந்த பங்கு பிரிந்த பிறகு, பங்கின் விலை ரூ.96ல் இருந்து ரூ.48 ஆக குறையும்.

நிறுவனத்தின் பங்குச் சந்தைத் தாக்கல் படி, நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு 1:2 என்ற விகிதத்தில் பங்குப் பிரிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது ரூ.2, முக மதிப்பு ஈக்விட்டி பங்குகள் ஒவ்வொன்றும் ரூ.1 ஆக முக மதிப்புள்ள 2 பங்குகளாகப் பிரிக்கப்படும். நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு ஜனவரி 20, 2025 அன்று பங்குகளைப் பிரிப்பதற்குத் தகுதியான பங்குகளைத் தீர்மானிப்பதற்கான பதிவுத் தேதியாக நிர்ணயித்துள்ளது.
இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் இந்த பங்கு 2% அதிகரித்து ரூ.98க்கு வர்த்தகமாகிறது. இந்தப் பங்கு ஒரு கட்டத்தில் ரூ.100ஐத் தாண்டியது. இந்தப் பங்கு 52 வாரங்களில் அதிகபட்ச விலை ரூ.261 ஆகவும், 52 வாரங்களில் குறைந்தபட்ச விலை ரூ.46.08 ஆகவும் உள்ளது.
அதேபோல், கடந்த ஒரு வாரத்தில் இந்த பங்கு 4% உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 26 சதவீதம் சரிவை கண்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில், இந்தப் பங்கு 54% சரிவைக் கண்டுள்ளது. இந்தப் பங்கு கடந்த ஓராண்டில் 64% லாபத்தைக் கொடுத்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்த பங்கு 759% லாபம் கொடுத்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பங்குகளில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அவற்றின் மதிப்பு தற்போது ரூ.8.59 லட்சமாக உயர்ந்திருக்கும். தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.2140 கோடியாக உள்ளது.
இதற்கிடையில், இந்த ஐடி நிறுவன பங்கு ஆன ப்ளூ கிளவுட் சாஃப்ட் டெக் சொல்யூஷன்ஸ் பங்குகளுக்கு சந்தை ஆய்வாளர்கள் வாங்கவுதற்கான மதிப்பீட்டை வழங்கியுள்ளனர். ஒரு பங்கிற்கு ரூ.102.7 என புதிய இலக்கு விலையை பரிந்துரைத்துள்ளது. மேலும், ஸ்டாப்லாஸ் ரூ. 86.5 நிர்ணயம் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications