முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்.. 20% உச்சத்தில் பென்னி பங்கு.. விலை வெறும் ரூ.23 தான்..!!

பங்குச் சந்தையில் ஸ்மால் கேப் நிறுவனமான ஷ்ரைடஸ் இண்டஸ்ட்ரீஸ் முன்னதாக விசிகே கேபிடல் மார்க்கெட் (VCK Capital Market-Shrydus Industries) பங்குகள் நேற்று 20% உயர்வுடன் ரூ.19.17 இல் நிறைவடைந்தது. நிறுவனம் அதன் 2024-25 நிதியாண்டிற்கான இரண்டாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பிறகு, பங்குகளில் பெரும் ஏற்றம் காணப்படுகிறது. அதேபோல், இன்றும் அதே ஏற்றத்தை சந்தித்ததால் தற்போது பங்கு விலை ரூ.23 எட்டியுள்ளது.

கடந்த சில நாட்களாக பங்குச்சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று வரை தொடர்ந்து 6வது நாளாக கடும் வீழ்ச்சியுடன் சந்தை முடிவடைந்தது. அதன்படி, மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 638 புள்ளிகள் சரிந்து 81050ல் முடிந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டியும் 219 புள்ளிகள் சரிந்து 24795ல் முடிந்தது. கடந்த 6 நாட்களில் சென்செக்ஸ் 5000 புள்ளிகளை இழந்தது.

 முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்.. 20% உச்சத்தில் பென்னி பங்கு.. விலை வெறும் ரூ.23 தான்..!!

இதற்கிடையில், இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் சற்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. இதற்கிடையில், ஷ்ரைடஸ் நிறுவனத்தின் பங்குகள் நேற்றும், இன்றும் பங்குகள் உச்சம் அடைந்துள்ளன. அதன் வர்த்தகத்தில் 5,450 சதவிகிதம் நிகர லாபம் அதிகரிப்பதாக அறிவித்த பிறகு 20 சதவிகிதம் அப்பர் சர்க்யூட்டில் லாக் செய்யப்பட்டன.

20 சதவீதம் அப்பர் சர்க்யூட்: ஷ்ரைடஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் இன்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 20 சதவீதம் உயர்ந்து ரூ.23.00 ஆக வர்த்தகமாகி வருகிறது. 2024-25 நிதியாண்டிற்கான அதன் இரண்டாவது காலாண்டு முடிவுகளை நிறுவனம் வெளியிட்ட பிறகு, பங்கு பெரும் ஏற்றத்தை பதிவு செய்துள்ளது. 2024 செப்டம்பர் காலாண்டில் நிறுவனம் சிறப்பான ஏற்றத்தை கண்டுள்ளது.

பங்குகளின் செயல்திறன்: ஷ்ரைடஸ் இடஸ்ட்ரீஸ் பங்குகள் கடந்த ஒரு மாதத்தில் 7 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் முதலீட்டாளர்கள் 6% மட்டுமே லாபம் பெற்றுள்ளனர். கடந்த ஓராண்டில் பங்குதாரர்கள் 32% இழப்பை சந்தித்துள்ளனர். நிறுவனம் மருந்துகள், ரியல் எஸ்டேட், பசுமை ஆற்றல் மற்றும் வேளாண் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு அதன் பெயரை விசிகே கேபிட்டல் மார்க்கெட் என்பதில் இருந்து ஷ்ரைடஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என மாற்றியுள்ளது.

காலாண்டு முடிவுகள்: இதன் சமீபத்திய காலாண்டு வருவாய் ரூ. 247 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த ஜூன் காலாண்டில் ரூ.1.01 கோடிகள் வருவாய் ஈட்டிய நிலையில், செப்டம்பர் காலாண்டில் ரூ.3.5 கோடி வருவாயை அதிகரித்துள்ளது. இதன்மூலம் நிறுவனம் ரூ. 5,340 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் ரூ.4.72 லட்சத்திலிருந்து அதிகரித்து இந்த காலக்கட்டத்தில் 2.72 கோடிகள் வருவாயாக உள்ளது.

ஆண்டு அடிப்படையில், வருவாய் ரூ. 63 சதவீதம் உயர்ந்துள்ளது. 2024 நிதியாண்டில் 2.15 கோடிகள் முதல் ரூ. 2024-25 நிதியாண்டின் செபடம்பர் காலாண்டில் இல் 3.5 கோடியாக உள்ளது. மறுபுறம், நிகர லாபம் ரூ. 1,411 சதவீதம் உயர்ந்துள்ளது. இது ரூ.18.32 லட்சம் முதல் இதே காலத்தில் ரூ.2.72 கோடியாக அதிகரித்துள்ளது.

மருந்து வணிகம்: நிறுவனம் குஜராத்தில் 468 க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட தயாரிப்புகளுடன் மாத்திரைகள் மற்றும் காப்ஸ்யூல்களை உற்பத்தி செய்யும் உற்பத்தி நிலையத்தை இயக்குகிறது. இது ஒட்டுமொத்த அளவிலான மருந்துகளைத் தயாரிக்கும் வசதியைக் கொண்டுள்ளது. இது கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பல்வேறு தேசிய மருந்து அதிகாரிகளிடமிருந்து ஒப்புதலை பெற்றுள்ளது.

ஹெல்த்கேர்: ஷ்ரைடஸ் இண்டஸ்ட்ரீஸ், வயது வந்தோருக்கான டயப்பர்கள் மற்றும் குழந்தைகளுக்கான டயப்பர்கள் இரண்டையும் தயாரித்து, சுகாதாரப் பொருட்கள் சந்தையில் வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்கிறது. இந்த தயாரிப்புகள் பல்வேறு நுகர்வோர் பிரிவுகளின் தேவைகளை நிவர்த்தி செய்து வருகிறது.

மேலும், நிறுவனம் சானிட்டரி நாப்கின் சந்தையில் நுழைந்துள்ளது. இது இந்தியாவின் மாதவிடாய் காலத்தில் உள்ள மக்கள்தொகையை இலக்காகக் கொண்டுள்ளது.

ரியல் எஸ்டேட்: ஷ்ரைடஸ் இண்டஸ்ட்ரீஸ் மும்பையில் ஒரு முக்கிய ரியல் எஸ்டேட் டெவலப்பராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் 50 க்கும் மேற்பட்ட திட்டங்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. இது 4 டவுன்ஷிப்களை உருவாக்கியுள்ளது. தற்போது 3 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.

கிரீன் எனர்ஜி துறை: ஷ்ரைடஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் கிரீன் எனர்ஜி துறையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இது அதன் பல்வேறு வணிக நடவடிக்கைகளின் இயல்பான விரிவாக்கமாக கருதப்படுகிறது.

பங்குதாரர்கள்: சமீபத்திய பங்குதாரர் அடிப்படையில், இதன் நிறுவன உரிமையாளர்கள் வசம் 25.86 சதவீத பங்குகள் உள்ளன. மீதமுள்ள 74.14 சதவீத பங்குகளை சில்லறை முதலீட்டாளர்கள் வைத்திருக்கிறார்கள்.

தற்போதைய நிலவரப்படி, விசிகே கேப்பிட்டல் மார்க்கெட்- ஷ்ரைடஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 19.92% உயர்வுடன் ரூ.23.00 ஆக வர்த்தகமாகிறது.

Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+