ஒன் பாயிண்ட் ஒன் சொல்யூஷன்ஸ் நிறுவனம் தொழில்நுட்பத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் அதன் பங்கு விலை வியக்கத்தக்க வகையில் உயர்ந்து சைலென்ட் கிங்மேக்கராக உயர்ந்துள்ளது.
ஒன் பாயிண்ட் ஒன் சொல்யூஷன்ஸ் நிறுவனம் BPO, KPO, IT சேவைகள், டெக்னாலஜி மற்றும் டிரான்ஸ்பார்மேஷன், மற்றும் அனலிட்டிக்ஸ் உள்ளிட்ட பல வகையான சேவைகளை வழங்கும் முழுமையான, டெக் சொல்யூஷன்களை வழங்கும் நிறுவனமாக செயல்படுகிறது. IT க்யூப் சொல்யூஷன்ஸ் என்னும் நிறுவனத்தை கையகப்படுத்தியதன் மூலம், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, மத்திய கிழக்கு போன்ற முக்கிய சந்தைகளில் அதன் வர்த்தகம் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நிறுவனத்தின் பங்கு வெறும் ரூ.1.91 க்கு வர்த்தகமாகியது. ஆனால், அதன் பிறகு அது 3,057% அதிகரித்து தற்போது ரூ.60 க்கு வர்த்தகமாகிறது. 2023 ஆம் ஆண்டில் 219%, 2022 ஆம் ஆண்டில் 45%, 2021 ஆம் ஆண்டில் 330% மற்றும் 2020 ஆம் ஆண்டில் 18% என தொடர்ச்சியான லாபத்தை முதலீட்டாளர்களுக்கு அளித்து வருகிறது.
2024ஆம் ஆண்டில் ஏற்கனவே 18% அதிகரித்துள்ள ஒன் பாயிண்ட் ஒன் சொல்யூஷன்ஸ் நிறுவன பங்குகள், இந்த ஆண்டு அதிகப்படியாக ரூ.77.50 என்ற உச்சத்தை தொட்டுள்ளது.
இன்று, ஒன் பாயிண்ட் ஒன் சொல்யூஷன்ஸ் நிறுவனம் டேட்டா அனலிட்டிக்ஸ் மற்றும் கன்ஸ்யூமர் கிரெடிட் அறிக்கை நிபுணத்துவம் கொண்ட முன்னணி பன்னாட்டு நிறுவனத்துடன் புதிய கூட்டணியை அமைத்துள்ளதாக அறிவித்ததுள்ளது. இந்த கூட்டணி, மூலம் அதன் வாடிக்கையாளர்களுக்கான அனுபவத்தை மேம்படுத்தி புதிய வர்த்தகத்தையும், வருமானத்தையும் பெற முடியும் என அறிவித்துள்ளது.
இதன் மூலம் இன்றைய வர்த்தகத்தில் ஒன் பாயிண்ட் ஒன் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு பெரிய அளவில் உயரும் என கணக்கிட்ட வேளையில் 1.16 சதவீத சரிவுடன் 59.38 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications