சில பங்குகள் முதலீட்டாளர்களை மில்லியனர்களாக ஆக்குகின்றன. அந்த வகையில், வெறும் ரூ.4க்கு கிடைத்த இந்த பென்னி ஸ்டாக் தற்போது ரூ.730 ஆக உயர்ந்துள்ளது. ஆம், இந்த பிரவேக் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பென்னி பங்கு ஆனது அதன் முதலீட்டாளர்களுக்கு 1 லட்ச ரூபாய் முதலீட்டை 1.68 கோடி ரூபாயாக மாற்றி வருமானத்தை அளித்துள்ளது. இந்த பங்கு குறித்து விரிவாக பார்க்கலாம்.
பங்குச்சந்தையில் உள்ள சில பங்குகள் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்ட லாபத்தை அளிக்கின்றன. பங்குதாரர்களை மிகக் குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்களாகிறார்கள். இந்த பென்னி ஸ்டாக் அற்புதமான வருமானத்தை அளித்து சில வருடங்களில் மல்டிபேக்கர் ஸ்டாக்காக மாறியுள்ளது. அப்படி ஒரு பங்கு ஆன பிரவேக் லிமிடெட் நிறுவனத்தின் பங்கின் விலை கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.4.34ல் இருந்து ரூ.730 ஆக உயர்ந்துள்ளது. இந்த காலகட்டத்தில், தோராயமாக 15,700 சதவீதம் லாபம் கிடைத்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பங்கில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தவர்களுக்கு தற்போது ரூ.1.68 கோடி கிடைத்துள்ளது. ஐந்து வருடங்களுக்கு முன் முதலீடு செய்து இன்னும் பங்கு வைத்திருந்தால் தற்போது ஜாக்பாட் அடித்திருக்கும்.

இந்தப் பங்கு நீண்ட கால அடிப்படையில் நல்ல லாபத்தைக் கொடுத்தாலும், சமீப காலமாக சிறப்பாகச் செயல்படவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை பங்கு விலை ரூ.729.95 ஆக முடிந்தது. தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.1.89 ஆயிரம் கோடியாக உள்ளது. பங்குகளின் 52 வார அதிகபட்சம் ரூ.1300 ஆகவும், 52 வாரங்களில் குறைந்தபட்சம் ரூ.627.10 ஆகவும் உள்ளது.
கடந்த 5 நாட்களில் இந்த பங்கு 1% மட்டுமே லாபம் கொடுத்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 0.21 சதவீதம் மட்டுமே உயர்வு காணப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் எதிர்மறை வருமானத்தை அளித்துள்ளது. அதாவது கடந்த 6 மாதங்களில் சுமார் 16 சதவீதம் குறைந்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை 7 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் 139 சதவீத வருமானத்தை அளித்துள்ளது.
குறிப்பாக ஒருவர் பணத்தை முதலீடு செய்வதற்கு பல விருப்பங்கள் உள்ளன. அவற்றில் மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தைகள், மத்திய அரசின் திட்டங்கள், இறையாண்மை தங்கப் பத்திரங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் போன்றவற்றில் ஒருவர் முதலீடு செய்யலாம். இவற்றை ஒப்பிடும்போது, பங்குச் சந்தை முதலீடு அதிக ரிஸ்க் மிக்கது. ரிஸ்க் இருந்தாலும் அதிக லாபத்திற்காக பலர் பங்குச் சந்தைக்கு ஈர்க்கப்படுகிறார்கள்.


Click it and Unblock the Notifications