பங்குச் சந்தையில் பென்னி பங்குகள்(Penny Stocks) எனப்படும் குறைந்த விலை பங்குகள் எப்போதுமே ஒரு லாட்டரி சீட்டு போன்றவை. வலுவான பின்னணி கொண்ட ஒரு நிறுவனம் குறைந்த விலையில் கிடைத்தால், அது முதலீட்டாளர்களுக்கு கிடைத்த ஜாக்பாட் தான். அந்த வகையில் தற்போது சந்தை வல்லுநர்களின் பார்வை Paisalo Digital Limited மீது விழுந்துள்ளது.
அதன் பங்கு விலையானது 50 ரூபாய்க்கு கீழே வர்த்தகமாகும் நிலையில், இந்த NBFC நிறுவனத்திற்கு பிரபல ரேட்டிங் ஏஜென்சியான பிரிக் ஒர்க் ரேட்டிங்ஸ், 540 கோடி ரூபாய் மதிப்பிலான கமர்ஷியல் பேப்பர்களுக்கு BWR A1+ என்ற மிக உயரிய தரவரிசையை வழங்கியுள்ளது. இது நிறுவனத்தின் நிதி வலிமையையும், கடனை திருப்பி செலுத்தும் திறனையும் காட்டுகிறது.

ஏற்கனவே எஸ்பிஐ லைஃப் போன்ற முக்கிய ஜாம்பவான்கள் முதலீடு செய்துள்ள இந்தப் பங்கு, இந்த அதிரடி ரேட்டிங் அப்டேட்டுக்கு பிறகு வரும் திங்கட்கிழமை சந்தையில் ராக்கெட் வேகத்தில் பாயுமா? முதலீட்டாளர்கள் ஏன் இந்த கவனத்தில் கொள்ள வேண்டும். இதன் தற்போதைய நிலவரம் என்ன பார்க்கலாம்.
பைசலோ டிஜிட்டல் லிமிடெட் எனப்படும் இந்த நிறுவனம் வங்கி சாரா நிதி நிறுவனமாகும். குறிப்பாக வங்கி சேவை சரியாக சென்றடையாத கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புற மக்களுக்காக செயல்படுகிறது. குறிப்பாக சுயதொழில் செய்யும் தனிநபர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு (MSME) தொழில் தொடங்கவும், அதை விரிவுபடுத்தவும் அடமானம் இல்லாமலோ அல்லது குறைந்த ஆவணங்களுடனோ கடன்களை வழங்குகிறது. உமீத் (Umeed), பிரகதி (Pragati) போன்ற பெயர்களில் இவர்கள் வழங்கும் கடன்கள் மிகவும் பிரபலமானது. இந்த நிறுவனத்தின் பங்கு தான் கவனத்தில் கொள்ள வேண்டியதாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த வங்கி சாரா நிதி நிறுவனமானது வெளியிடும் 540 கோடி ரூபாய் மதிப்பிலான கமர்ஷியல் பேப்பருக்கு தான், ரேட்டிங் நிறுவனமானது BWR A1+ என்ற உயர் ரேட்டிங்கை கொடுத்துள்ளது. குறுகிய கால நிதி கடமைகளை இந்த நிறுவனம், மிகச் சரியான நேரத்தில் திருப்பி செலுத்தும் வலிமையை கொண்டுள்ளது என்பதையே இந்த ரேட்டிங் உறுதிப்படுத்துகிறது. இது முதலீட்டாளர்களுக்கு ஒரு பெரிய பாதுகாப்பு உணர்வைத் தரும்.
அதேபோல், ஐந்து ஆண்டுகள் வரையிலான கால அளவு கொண்ட 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான மாற்ற முடியாத கடன் பத்திரங்களுக்கு (NCDs), BWR AA/Stable என்ற ரேட்டிங்கை பிரிக்குவார்க் நிறுவனம் மீண்டும் உறுதி செய்துள்ளது. இது நிறுவனத்தின் நீண்ட கால நிதி நிலை தன்மையையும் காட்டுகிறது. இது குறைந்த கடன் அபாயம் உள்ளதை காட்டுகிறது. அதாவது நிறுவனம் வலுவான நிதி நிலையுடன் இருப்பதை காட்டுகிறது. இந்த ரேட்டிங்கானது அடுத்த 12 மாதங்களுக்கு பொருந்தும் என கூறப்படும் நிலையில், இது வரவிருக்கும் நாட்களில் பைசலோ டிஜிட்டல் பங்கு விலையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
மார்ச் மாதத்தில் இதுவரையில் 1.4% ஏற்றம் கண்டுள்ள இப்பங்கு, கடந்த பிப்ரவரி மாதத்தில் 3.7% ஏற்றம் கண்டிருந்தது. கடந்த ஏப்ரல் 2024 முதல் ஆகஸ்ட் 2025 வரையில் இருந்த செல்லிங் அழுத்தத்தில் இருந்து விடுபட்டு, அதன் பிறகு மெதுவாக ஏற்றம் காண ஆரம்பித்தது. மேற்கண்ட காலகட்டத்தில் 50% இழப்பை கொடுத்து, குறுகிய கால முதலீட்டாளர்களை கவலையில் ஆழ்த்தியது. ஆனால் தற்போதைய சூழல், மீண்டும் இப்பங்கானது ஏற்றம் காண வழிவகுக்கலாமோ என்ற எண்ணத்தை துளிர்விட செய்துள்ளது.
கடந்த 2025ம் ஆண்டில் 27% மேல் சரிந்த இப்பங்கு, கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்த அளவுக்கு சரிந்து எதிர்மறையான வருவாயை கொடுத்தது இதுவே முதல் முறையாகும். இருப்பினும் சமீபத்திய சரிவு குறைந்த விலையில் இப்பங்கை வாங்க வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. தற்போது இப்பங்கானது 34.95 ரூபாயாக காணப்படுகிறது. இப்பங்கை சரியான ஆலோசனையுடன் வாங்க திட்டமிடல் நல்லது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications