திங்கள்கிழமையன்று பங்குச்சந்தையில் விகாஸ் லைப்கேர் பங்கு விலை ஏறுமுகத்தில் காணப்பட்டது. ரூ.546 கோடி மார்க்கெட் கேப் உள்ள இந்த நிறுவனத்தின் பங்கு ரூ.3.8 ஆக தேசிய பங்குச் சந்தையில் உயர்ந்தது. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 4.05 ரூபாய் வரையில் உயர்ந்தாலும், வர்த்தக முடிவில் 2.50 சதவீதம் சரிந்து 3.90 ரூபாயாக சரிந்தது.
கடந்த ஒரு மாதத்தில் விகாஸ் லைப்கேர் பங்கு விலை 27.87 சதவீதம் உயர்ந்துள்ளது. ரூ.5க்கு குறைவான பென்னி ஸ்டாக் நிறுவனங்கள் அவற்றின் போர்டு ஆப் டைரக்டர்களுக்கு ரூ.40 கோடி நிதி திரட்டுவதற்கான திட்டத்தை முன்வைத்துள்ளது. இந்த பென்னி ஸ்டாக் நிறுவனங்களும் இந்த முன்மொழிவுக்கு தங்களது போர்டு ஆப் டைரக்டர்ஸ் ஒப்புதல் தந்துள்ளதாக கூறின.

நிறுவனத்தின் புரொமோட்டரான விகாஸ் கார்க், கூடுதல் ஈக்குவிட்டி, கன்வர்டிபிள் இன்ஸ்ட்ரூமென்ட், வாரண்ட்கள் அல்லது வேறு காம்பினேஷன்கள் ரொக்கமாக ரூ.40 கோடிக்கு அதிகரிக்காமல் சேகரிப்பதற்கு தலைமைக்கு அனுமதி தரப்பட்டுள்ளது என்றார்.
அண்மையில் MSR Apparels Private Limited நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை விகாஸ் லைப்கேர் வாங்கியது. MSR Apparels Private Limited எல்லா வகையான ஜவுளிகள் மற்றும் ஆடைகள் ஆக்ஸசரிஸ்களை தயாரிப்பு நிறுவனமாகும்.
வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக MSR Apparels Private Limited இன் 98 சதவீத பங்கை விகாஸ் லைப்கேர் வாங்கியுள்ளது. இதன் மதிப்பு ரூ.125 மில்லியன்களாகும். இந்த இணைப்பு மூலம் விகாஸ் லைப்கேர் மூலப்பொருட்கள் வியாபாரத்தில் இருந்து தொழிலை விரிவுபடுத்தியுள்ளது. பி2பி பிரிவில் கவனம் செலுத்துகிறது. எப்எம்சிஜி, அக்ரோ, இன்ப்ராஸ்ட்ரக்சர் புராடக்ட்கள் மற்றொரு முக்கிய விஷயமாக உள்ளது.
ரூ.5க்கு கீழான பென்னி ஸ்டாக் வர்த்தகம் தேசிய பங்குச் சந்தையிலும் பம்பாய் பங்குச்சந்தையிலும் வர்த்தமாகின்றன. தேசிய பங்குச் சந்தையில் அதன் வர்த்தக அளவு 2.26 கோடியாக உள்ளது. 52 வார உச்சமாக ஒரு பங்கு ரூ.5.40 ஆக உள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications