ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ப்ளூ கிளவுட் சாப்ட்டெக் சொல்யூஷன்ஸ் லிமிடெட் (பிசிஎஸ்) , ஏஐ அடிப்படையிலான சுகாதாரப் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப தயாரிப்புகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு புதுமையான AIoT சொல்யூஷன்ஸ் தீர்வுகள் வழங்கும் நிறுவனமாகும். மேலும், இந்நிறுவனம் தனது அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் வணிகங்கள் மற்றும் சமூகங்களை மேம்படுத்துகிறது. ஸ்மால்கேப் பங்கான பிசிஎஸ் நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
பிசிஎஸ் நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் வருவாயாக ரூ.235.27 கோடி ஈட்டியுள்ளது. மேலும் நிகர லாபமாக ரூ.9.40 கோடி ஈட்டியுள்ளது. 2023 செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது கடந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 131 சதவீதம் அதிகரித்துள்ளது. 2023 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் இந்நிறுவனத்தின் நிகர வருவாய் 112 சதவீதம் உயர்ந்து ரூ.613.24 கோடியாகவும், நிகர லாபம் 316 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.31.23 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

ப்ளூ கிளவுட் சாப்ட்டெக் சொல்யூஷன்ஸ் லிமிடெட் (பிசிஎஸ்) நிறுவனம் கடந்த மாதம் தனது பங்குகளை 2:1 என்ற விகிதத்தில் பிரித்தது. அதாவது ரூ.2 முகமதிப்பு கொண்ட ஒவ்வொரு பங்கையும், ரூ.1 முக மதிப்பு கொண்ட 2 பங்குகளாக பிரிக்கப்பட்டது. இந்த பங்கு பிரிப்பு நடவடிக்கை கடந்த ஜனவரி 20ம் தேதி நிறைவடைந்தது. அன்றைய தினம் பங்கு பிரிப்புக்கான பதிவு தேதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
2024 ஜூலை 29ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே ப்ளூ கிளவுட் சாப்ட்டெக் சொல்யூஷன்ஸ் நிறுவன பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.130.50ஐ எட்டியது. அதன் பிறகு பங்கு விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இந்நிறுவன பங்கின் விலை 28.86ஆக இருந்தது.இந்நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.1,259 கோடியாக உள்ளது. தற்போது இப்பங்கின் விலை அதன் 52 வார குறைந்தபட்ச விலையை (ரூ.23.04) காட்டிலும் சுமார் 25 சதவீதம் அதிகமாக உள்ளது.
Story written by: Subramanian
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications