இந்திய பங்குச்சந்தையில் கடந்த ஆறு மாதங்களில், சில பென்னி பங்குகள் 120% முதல் 600% வரையிலான அசாதாரண லாபத்தை ஈட்டி முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. ரூபாய் 1,000 கோடிக்கும் குறைவான சந்தை மூலதனம், ஒரு பங்குக்கு ரூபாய் 20க்குக் குறைவான விலை, மற்றும் சமீபத்திய வர்த்தக அளவு 5 லட்சம் பங்குகளுக்கு மேல் என்ற அளவுகோலின்படி இந்த பங்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ACE Equity தளம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, இவை பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால் பென்னி பங்குகள், அவற்றின் குறைந்த விலை மற்றும் வியத்தகு வளர்ச்சி சாத்தியக்கூறுகள் காரணமாக அதிக ஈர்ப்பைப் பெறுகின்றன. இருப்பினும், இவை அதிக ரிஸ்க் நிறைந்தவை. பொதுவாக, குறைந்த பணப்புழக்கம், அதிக ஏற்ற இறக்கம் மற்றும் குறைவான நிதி வெளிப்படைத்தன்மை கொண்டவையாக இந்தப் பங்குகள் இருக்கின்றன. எனவே, முதலீட்டாளர்கள் கவனமாக அணுக வேண்டும்.

பென்னி பங்குகளின் வெற்றிக்கு அதிர்ஷ்டம் மட்டுமல்லாமல், தெளிவான முதலீட்டு உத்தி மற்றும் வலுவான ரிஸ்க் மேலாண்மையும் தேவை. இத்தகைய பங்குகளில் முதலீடு செய்யும் முன் விரிவான ஆய்வு செய்வது அவசியம். கடந்த ஆறு மாதங்களில் சிறப்பாக செயல்பட்ட சில பென்னி பங்குகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
ஒன்சோர்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அண்ட் வென்ச்சர்ஸ்: இந்த நிறுவன பங்கு மதிப்பு 6 மாதங்களில் 601% என உயர்ந்துள்ளது. தற்போது கூட இந்த பங்கின் விலை 10 ரூபாய்க்கும் கீழ் அதாவது 9.89 ரூபாய் என்ற விலையில் தான் வர்த்தகம் ஆகிறது.
ஆண்டிக் ஃபின்சர்வ்: இந்த நிறுவன பங்கு மதிப்பு 6 மாதங்களில் 329% உயர்ந்துள்ளது. இதன் தற்போதைய விலை ரூ.2.92 ஆகும்.
இன்று தமிழ்நாட்டில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன?
ப்ளூகார்ட் எண்டர்டெயின்மென்ட்:இந்த நிறுவன பங்கு மதிப்பு 6 மாதங்களில் 292% அதிகரித்துள்ளது. இப்போது கூட இந்த பங்கின் மதிப்பு ரூ.3.50 என வர்த்தகமாகிறது.
சந்திரமா மெர்கன்டைல்ஸ்: இந்த நிறுவன பங்கு மதிப்பு 6 மாதங்களில் 266% உயர்ந்துள்ளது. தற்போது இந்த பங்கினை ரூ. 10.42 என்ற விலைக்கே வாங்கலாம்.
அவான்ஸ் டெக்னாலஜிஸ்: இந்த நிறுவன பங்கு மதிப்பு 6 மாதங்களில் 177% அதிகரித்துள்ளது. இந்த பங்கினை இப்போது கூட ரூ. 1.69 என்ற குறைந்த விலைக்கே வாங்கலாம்.
ப்ரோ ஃபின் கேபிடல் சர்வீசஸ்: இதே போல ப்ரோ ஃபின் கேபிடல் சர்வீசஸ் பங்கு 6 மாதத்தில் 147% வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் தற்போதைய விலை ரூ.10.07.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications