பங்குச் சந்தையின் கடைசி வாரத்தில் 8 பென்னி பங்குகள் சிறந்த லாபத்தை கொடுத்துள்ளது. அதன்படி, இந்த பங்குகள் இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் 21% முதல் 95% வரை உயர்ந்து மல்டிபேக்கர் வருமானத்தை கொடுத்துள்ளன. கடந்த செப்டம்பர் 20ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் முக்கியக் குறியீடு மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸில் கிட்டத்தட்ட 2% அதிகரித்தது. இந்த ஏற்றத்தில், கடந்த வாரம் 8 பென்னி பங்குகள் லாபம் அடைந்துள்ளன. இதன் மூலம் 20% முதல் 95% வரை வருமானம் கிடைத்தது. இவை வெறும் ரூ.20க்கும் குறைவான பங்கு விலையும், ரூ.1,000 கோடிக்கும் குறைவான சந்தை மூலதனமும் கொண்ட நிறுவனங்கள் ஆகும். மேலும் இந்த பங்குகளின் வர்த்தக அளவு 5 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.
நைச்சா கார்ப்பரேஷன்
பல்வேறு வகையான பொருட்களின் வர்த்தகத்தில் நைச்சா கார்ப்பரேஷன் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இது ரியல் எஸ்டேட் மற்றும் முதலீட்டுத் துறைகளில் வணிக இருப்புகளை கொண்டுள்ளது. இதன் வாராந்திர லாபம் 92% ஆகவும், இதன் தற்போதைய
பங்கு விலை ரூ.13.31 ஆகவும் உள்ளது.

கௌதம் ஜெம்ஸ்
நிறுவனம் வைரம் மற்றும் நகை வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. மெருகூட்டப்பட்ட வைரங்கள் வாடிக்கையாளர் தேவைக்கேற்ப பல்வேறு வடிவங்களில் விற்பனை செய்யகிறது. இதன் வாராந்திர லாபம் 35% ஆகவும், இதன் தற்போதைய பங்கு விலை ரூ.10.39 ஆகவும் உள்ளது.
டான்யூப் இண்டஸ்ட்ரீஸ்
கூழ், காகிதம் மற்றும் பலகை தயாரிப்புகளை கையாளும் நிறுவனமாக டான்யூப் இண்டஸ்ட்ரீஸ் உள்ளது. இது தொடர்புடைய இயந்திரங்கள், பொருட்கள் மற்றும் கருவிகள் விற்பனை செய்கிறார்கள். இதன் வாராந்திர லாபம் 29% ஆகவும், தற்போதைய பங்கு விலை ரூ.5.35 ஆகவும் உள்ளது.
கேசிடி இண்டஸ்ட்ரீஸ் இந்தியா
நிறுவனம் பலதரப்பட்ட வணிகங்களைச் செய்கிறது. ரியல் எஸ்டேட், கட்டுமானம், அலங்காரம், உள்கட்டமைப்பு, அச்சிடுதல், விருந்தோம்பல் மற்றும் ஆட்டோமொபைல் துறைகளில் நாடு முழுவதும் சேவை செய்கிறது. இதன் வாராந்திர லாபம் 28% ஆகவும், இதன் தற்போதைய பங்கு விலை ரூ 9.19 ஆகவும் உள்ளது.
ARC ஃபைனான்ஸ்
இது NBFC துறையில் வணிகம் செய்யும் நிதி நிறுவனம் ஆகும். இது ஒரு லாப நோக்கமற்ற அமைப்பாகும். இது சுற்றுச்சூழல் நட்பு வணிகங்களுக்கு நிதி வழங்குகிறது. இதன் வாராந்திர லாபம் 27% ஆகவும், இதன் தற்போதைய
பங்கு விலை ரூ.2.54 ஆக உள்ளது.
ரஜ்னிஷ் வெல்னஸ்
மருந்துத் துறையில் வணிகம் செய்யும் நிறுவனமான ரஜ்னிஷ் வெல்னஸ், பாலியல் ஆரோக்கியம், ஆற்றல் மறுவாழ்வு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது. இதன் வாராந்திர லாபம் 26% லாபத்தை கொண்டுள்ளது. இதன் பங்கு விலை ரூ.4.17 ஆக உள்ளது.
யாமினி இன்வெஸ்ட்மெண்ட்
நிதி-முதலீட்டுத் துறையில் வணிகம் செய்யும் நிறுவனமான யாமினி இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனம் மூலதனம், கடன் மற்றும் பங்கு பங்கு உட்பட பல்வேறு வகையான வணிகங்களை செய்கிறது. இதன் வாராந்திர லாபம் 26% ஆகும். இதன் பங்கு விலை ரூ.2.08 ஆகும்.
ஸ்வஸ்தி விநாயக சிந்தெடிக்ஸ்
ஜவுளித் துறையில் வணிகம் செய்யும் நிறுவனமான ஸ்வஸ்தி விநாயக சிந்தெடிக்ஸ் சூட்டிங், ஷர்ட்டிங், சேலை மற்றும் டிரஸ் மெட்டீரியல் விற்பனையில் நிபுணத்துவம் பெற்றது. இதன் வாராந்திர லாபம் 21%
மற்றும் பங்கு விலை ரூ 8.78 ஆக உள்ளது.
பென்னி பங்கு என்றால் என்ன?
பென்னி பங்குகள் மிக மலிவான விலையில் வர்த்தகம் செய்யும் பங்குகள் ஆகும். பெரும்பாலும் இந்த பங்குகள் ரூ.10 குறைவாக வர்த்தகம் செய்யப்படுகின்றன. அதேபோல், இந்த பங்குகளின் சந்தை மூலதனம் மிகவும் சிறியதாக இருக்கும். இதனாலயே இது முதலீட்டாளர்களிடையே அதிக ஆர்வத்தை பெறுகிறது.
Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!



Click it and Unblock the Notifications