டெல்லி: Vintron Informatics Limited என்ற பென்னி ஸ்டாக் நிறுவனம் கடந்த 5 ஆண்டு காலத்தில் 9,422 சதவீத லாபத்தை பெற்று தந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 0.55 ஐந்து ரூபாய் ஆகும். அதுவே தற்போது 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 52 ரூபாய் என உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு இத்தனை சதவீதம் உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 98 சதவீதம் உயர்ந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தற்போது வரை 244% அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் ஏழு மாதங்களில் இரண்டு மாதங்களை தவிர மீதமுள்ள ஐந்து மாதங்களிலும் இந்த நிறுவனத்தின் பங்கு வளர்ச்சி பாதையிலேயே இருந்துள்ளது. குறிப்பாக ஜூலை மாதத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு 51% உயர்ந்திருக்கிறது. ஜூலை 30ஆம் தேதி இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு அதன் 52 வார கால உச்சத்தை எட்டியது அதாவது 52 ரூபாய் ஆகும்.

Vintron Informatics Limited நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. சிசிடிவி கேமரா, வைஃபை சம்பந்தப்பட்ட பொருட்கள் , வாகனங்களுக்கான கேமராக்கள், கேமராக்களுக்கான மென்பொருள்கள் என உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. கிட்டத்தட்ட 30 ஆண்டு காலமாக இந்த நிறுவனம் இந்த துறையில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
ஆனால் இந்த நிறுவனமானது தற்போது பங்குச்சந்தையில் ESM: Stage 2 என்ற நிலையில் இருக்கிறது. அதாவது முதலீட்டாளர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தேசிய பங்குச்சந்தையானது குறிப்பிட்ட நிறுவனங்களை Enhanced Surveillance Measure என்ற பிரிவின்கீழ் வைக்கும். அதில் இந்த நிறுவனம் ஸ்டேஜ் 2வில் இருக்கிறது. அதாவது periodic call auctionகளில், trade-for-trade settlement மற்றும் 2 percent price band என்ற அடிப்படையில் வர்த்தகம் செய்யலாம்.
இந்த நிறுவனத்தை பொருத்தவரை 2024ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் இந்த நிறுவனத்தின் லாபம் 16.51 கோடி ரூபாய் ஆகும், நிறுவனத்தின் வருமானம் 167.5 கோடி ஆகும். இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. ஐசிஐசிஐ டைரக்ட் தரகு நிறுவனம் இந்த நிறுவன பங்கின் மதிப்பு வளர்ச்சி பாதையில் இருக்கும் என தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் ஆண்டு EPS வளர்ச்சி நிலையானதாக இருக்கிறது என தெரிவிக்கும் ஐசிஐசிஐ டைரக்ட் நிறுவனம் இதனை வாங்கலாம் என்ற மதிப்பீட்டில் வைத்திருக்கிறது.
இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 395 கோடி ரூபாய் ஆகும். பங்குகளில் 73% பிரமோட்டோர்கள் வசமும் 26 % சில்லறை முதலீட்டாளர்கள் வசமும் இருக்கிறது. பொதுவாக பென்னி ஸ்டாக்குகளில் முதலீடு செய்வது மிகவும் அபாயகரமானது. பெரிய அளவில் அபாயத்தை ஏற்கும் திறன் கொண்ட முதலீட்டாளர்கள் மட்டுமே பென்னி ஸ்டாக்குகளை தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் இதில் லாபமும் அதிகமாக இருக்கலாம் அதேவேளையில் நஷ்டம் அடைந்தாலும் அதிக நஷ்டமாக இருக்கலாம்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?



Click it and Unblock the Notifications