5 ஆண்டுகளில் 9,133% லாபம்.. முதலீட்டாளர்களை குஷிப்படுத்திய Piccadily Agro..!

பிக்காடிலி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் 1997ல் சர்க்கரை உற்பத்தி செய்யும் நிறுவனமாக தனது வணிகத்தை தொடங்கியது. பின்னர் 2007ம் ஆண்டில் ஒரு மதுபான ஆலையை அமைத்தது. தற்போது இந்நிறுவனம் சர்க்கரை மற்றும் மதுபானம் பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருவது அதன் நிதி திறன் சிறப்பாக உள்ளதை வெளிப்படுத்துகிறது. இந்நிறுவனத்தின் கடந்த செப்டம்பர் காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்ததை காட்டிலும் சிறப்பாக இருந்தது.

2024-25ம் நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) இந்நிறுவனத்தின் நிகர லாபம் 109 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.25 கோடியாக அதிகரித்துள்ளது. 2023 செப்டம்பர் காலாண்டில் பிக்காடிலி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நிகர லாபமாக ரூ.11.9 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.

5 ஆண்டுகளில் 9,133% லாபம்.. முதலீட்டாளர்களை குஷிப்படுத்திய Piccadily Agro..!

2024 செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.186 கோடி ஈட்டியுள்ளது. இது 2023 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 63 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் பிக்காடிலி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ.114.2 கோடியாக இருந்தது.

கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் ஒரு பங்கு வாயிலான வருவாய் முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 109.52 சதவீதம் உயர்ந்து ரூ.2.64ஆக அதிகரித்துள்ளது. 2023 செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் ஒரு பங்கு வாயிலான வருவாய் ரூ.1.3ஆக இருந்தது. நிறுவனம் நல்ல லாபம் ஈட்டுவது போல் இந்நிறுவன பங்குகளும் முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயத்தை கொடுத்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 9,133 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. 2024 டிசம்பர் 26ம் தேதியன்று இப்பங்கின் விலை புதிய உச்சமான ரூ.1,019.90ஐ எட்டியது. கடந்த ஒரு மாதத்தில் இப்பங்கின் விலை 21 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சி கண்டுள்ளது.

2020 ஜனவரி 23ம் தேதியன்று பங்குச் சந்தையில் வர்த்தத்தின் முடிவில் பிக்காடிலி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கின் விலை ரூ.8.74ல் முடிவுற்றது. இன்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.815ஐ எட்டியது. ஆக, 5 ஆண்டுகளில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 9,133 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது.

கடந்த 1 வருடத்தில் இப்பங்கு 177 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது. 2 ஆண்டுகளில் இப்பங்கின் விலை 1,660 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இப்பங்கு முதலீட்டாளர்களின் செல்வத்தை 2,457 சதவீதம் அதிகரித்துள்ளது.

2024 டிசம்பர் காலாண்டு நிலவரப்படி, பிக்காடிலி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் புரோமோட்டர்ஸின் பங்கு மூலதனம் 70.97 சதவீதமாக எந்தவித மாற்றம் இன்றி உள்ளது. அதேசமயம், இந்நிறுவனத்தில் அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு மூலதனம் குறைந்துள்ளது. அவர்களின் பங்கு மூலதனம் 0.88 சதவீதத்திலிருந்து 0.78 சதவீதமாக குறைந்துள்ளது.

அதேசமயம் அனனிய முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 28லிருந்து 32ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த டிசம்பர் காலாண்டு நிலவரப்படி, அந்நிறுவனத்தில் நிறுவன முதலீட்டாளர்களின் பங்கு மூலதனம் 0.91 சதவீதத்திலிருந்து 0.79 சதவீதமாக சரிவடைந்துள்ளது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

Story Written by: Subramanian

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+