இந்தியாவின் முன்னணி ஃபின்டெக் நிறுவனமான பைன் லேப்ஸ், செபி அமைப்பிடம் ஜூன் 26 அன்று ஐபிஓ வெளியிட்டு இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்காக DRHP அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்தியாவில் அடுத்தடுத்து வெற்றிப்பெற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அனைத்தும் ஐபிஓ வெளியிட்டு இந்திய பங்குச்சந்தைில் பட்டியலிட திட்டமிட்டு வருகிறது. சோமேட்டோ, ஸ்விக்கி துவங்கி தற்போது இதன் பாதையில் பைன் லேப்ஸ் ஐபிஓ வெளியிட தயாராகியுள்ளது.
இந்திய முதலீட்டாளர்கள் மத்தியில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு பெரும் மதிப்பு இருக்கும் வேளையில், இத்தகைய நிறுவனங்கள் நீண்ட கால முதலீட்டுக்கு அதிகப்படியான வாய்ப்புகளை கொண்டுள்ளது. இதில் பைன் லேப்ஸ்-ம் ஒன்றாக இருக்கும் என கூறப்பட்டாலும் இதன் உண்மையான நிலையை அறிந்த பின்பே முதலீடு செய்ய வேண்டும்.

பைன் லேப்ஸ் இந்த ஐபிஓ மூலம், ரூ.2,600 கோடி புதிய பங்குகள் மூலம் திரட்டப்பட உள்ளது, மேலும் 14.78 கோடி பங்குகள் விற்பனைக்கு (OFS) வழங்கப்பட உள்ளன. பீக் எக்ஸ்வி பார்ட்னர்ஸ், டெமாசெக், மாஸ்டர்கார்டு, பேபால் உள்ளிட்ட பைன் லேப்ஸ்-ன் முக்கிய முதலீட்டாளர்கள் அனைவரும் இந்த ஐபிஓ-வில் தங்கள் கையில் இருக்கும் பங்குகளை விற்பனை செய்ய உள்ளனர்.
ஐபிஓ திட்டம்: பைன் லேப்ஸ், இந்த ஐபிஓ மூலம் ரூ.2,600 கோடி புதிய மூலதனத்தை திரட்டுவதோடு, 14.78 கோடி பங்குகளை OFS வாயிஸாக விற்பனைக்கு வழங்க உள்ளது. இந்த பங்கு விற்பனையில், பீக் எக்ஸ்வி பார்ட்னர்ஸ் 3.89 கோடி பங்குகளையும் (26.4%), டெமாசெக் 1.48 கோடி பங்குகளையும் (10%), மாஸ்டர்கார்டு 1 கோடி பங்குகளையும் (6.76%), பேபால் 1.15 கோடி பங்குகளையும் விற்க உள்ளன.
மேலும், பைன் லேப்ஸ் நிறுவனத்தில் ஆரம்பக்கட்டத்தில் முதலீடு செய்த ஆக்டிஸ் 1.49 கோடி பங்குகளை இந்த ஐபிஓ-வில் விற்பனை செய்ய உள்ளது. இதை தொடர்ந்து மற்ற முதலீட்டாளர்கள் பட்டியலில் இன்வெஸ்கோ (54.4 லட்சம் பங்குகள்), மேடிசன் இந்தியா (51.1 லட்சம் பங்குகள்), மற்றும் எஸ்பிஐ-எஃப்எம்ஓ எமர்ஜிங் ஆசியா ஃபண்ட் (25.4 லட்சம் பங்குகள்) ஆகியவையும் பங்கு விற்பனை செய்ய உள்ளது.
பொதுவாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்த பெரும் முதலீட்டாள்கள் அனைவரும் ஐபிஓ வெளியிடும் போது அதிகப்படியான பங்குகளை விற்பனை வழக்கம், இதேபோல தான் தற்போது நடக்கிறது. ஆனால் முதலீட்டாளர்கள் எந்த அளவுக்கு பங்குகளை விற்கின்றனர் என்பது தான் முக்கியமான கேள்வி. இந்த ஐபிஓ மூலம் பைன் லேப்ஸ் இந்திய பங்குச் சந்தைகளான பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ-யில் பட்டியலிடப்பட உள்ளது.
தனிநபர் பங்கு விற்பனை: பைன் லேப்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த நிறுவனங்கள் மட்டும் அல்லாமல், இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அம்ரிஷ் ராவ் 2.35% பங்கு வைத்திருக்கும் நிலையில், 32.06 லட்சம் பங்குகளை விற்க உள்ளார். இதேபோல் இந்நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் லோக்வீர் கபூர் 1.97% பங்கு வைத்திருக்கும் நிலையில், 37.64 லட்சம் பங்குகளை விற்கிறார்.
முதன்மை வணிக அதிகாரி குஷ் மெஹ்ரா 4.45 லட்சம் பங்குகளை விற்பனை செய்ய உள்ளார். இதனால் இந்த ஐபிஓ-வில் விற்கப்பட்டும் பங்குகள் முழுக்க முழுக்க நிறுவன முதலீட்டாளர்களால் மட்டும் நடத்தப்படவில்லை என்பதை காட்டுகிறது. மேலும், அம்ரிஷ் ராவ்-க்கு 2025 ஈஎஸ்ஓபி திட்டத்தின் கீழ் 1.1 கோடி பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பைன் லேப்ஸின் பயணம்: 1998-ல் லோக்வீர் கபூர், ராஜுல் கார்க், மற்றும் தருண் உபாத்யாய் ஆகியோரால் தொடங்கப்பட்ட பைன் லேப்ஸ், ஆரம்பத்தில் வணிகர்களுக்கான பாயிண்ட் ஆஃப் சேல் (PoS) இயந்திரங்களை வழங்கியது. பின்னர், இது முழு அளவிலான merchant commerce தளமாக மாறியது, இப்போது "பை நவ், பே லேட்டர்" (BNPL), பில் நிர்வாகம், கிப்ட் மற்றும் லாயல்டி திட்டங்கள், மற்றும் ஆன்லைன் கட்டண தீர்வுகளை வழங்குகிறது.
2021-ல் ஃபேவ் (Fave) என்னும் நிறுவனத்தை கையகப்படுத்தியதன் மூலம் ஆன்லைன் பேமெண்ட் துறைக்குள் பைன் லேப்ஸ் நுழைந்தது. தற்போது இந்தியா மட்டும் அல்லாமல், மலேசியா, மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வணிகர்களுக்கு சேவை அளிக்கிறது.
மதிப்பீடு: 2022 பைன் லேப்ஸ் முதலீட்டை திரட்டும் போது 5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் நிதியை திரட்டியது. 2025-ல் ஐபிஓ வெளியிடுவதற்காக சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கு தனது தலைமையகத்தை மாற்றியது குறிப்பிடத்தக்கது.
நிதி நிலை மற்றும் சந்தை நிலை: 2024 நிதியாண்டில், பைன் லேப்ஸ் ரூ.1,317 கோடி வருவாயை ஈட்டியது, இது 2023-ல் ரூ.1,281 கோடியிலிருந்து 2.8% அதிகமாகும். ஆனால், நஷ்ட அளவீடு ரூ.56 கோடியிலிருந்து ரூ.187 கோடியாக மூன்று மடங்கு உயர்ந்ததுள்ளது.
இந்நிறுவனம், பேடிஎம், ரேசர்பே, மற்றும் ஃபோன்பே போன்றவற்றுடன் போட்டியிடுகிறது. இந்தியாவின் ஃபின்டெக் சந்தை, அரசின் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளால் வேகமாக வளர்ந்து வருகிறது.
இந்திய ஸ்டார்ட்அப் சந்தை: பைன் லேப்ஸின் ஐபிஓ, இந்திய ஃபின்டெக் துறையில் முக்கிய மைல்கல்லாக இருக்கும். 2021-ல் பேடிஎம்மின் $2.5 பில்லியன் ஐபிஓவிற்கு பிறகு, இது மிகப்பெரிய ஃபின்டெக் ஐபிஓவாக இருக்கலாம். இந்திய பங்குச் சந்தைகள், 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக மதிப்பு இழப்பை சந்தித்த போதிலும், பைன் லேப்ஸ் சந்தை நிலைமைகளை பொருட்படுத்தாமல் களத்தில் இறங்க திட்டமிட்டுள்ளது.
முதலீட்டாளர்களுக்கு ஆட்வைஸ்: இந்திய முதலீட்டாளர்கள், ஃபின்டெக் துறையில் வளர்ந்து வரும் வாய்ப்புகளை கவனிக்க வேண்டும். பைன் லேப்ஸின் ஐபிஓ, நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் சந்தை நிலைமைகளை மதிப்பிடுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.
முதலீட்டாளர்கள், இந்நிறுவனத்தின் நிதி நிலை, போட்டி, மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களை உன்னிப்பாக ஆய்வு செய்த பின்பே முதலீடு செய்ய வேண்டும். காரணம் கடந்த 5 வருடத்தில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஸ்டார்அப் நிறுவனங்களின் பங்கு விலை தற்போது பட்டியலிட்டப்பட்ட விலை காட்டிலும் குறைவாகவே உள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications