உபி-யில் பாஜக வெற்றியின் எதிரொலி.. இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு..!
உத்தரபிரதேச மாநில தேர்தலில் பிரதமர் மோடியின் பாரத ஜனதா கட்சி எதிர்பார்ப்புகளையும் தாண்டி 403 சீட்டுகளில் 312 சீட்டுகளில் வெற்றி கனியை பறித்துள்ளது. இதன் மூலம் மோடி பார்வையிலான இந்திய பொருளாதாரத்தின் மறுசீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.
இதன் காரணமாகத் திங்கட்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் ஹோலி பண்டிகைக்காக மும்பை பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாணய சந்தை முழுமையாகச் செயல்படும் நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்புக் கணிசமாக உயர்ந்துள்ளது.
வெற்றி
இந்தியாவில் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரபிரதேசத்தில் 2012ஆம் ஆண்டு வெற்றி பெற்ற இடங்களை விடவும் சுமார் 47 சீட்டுகள் அதிகமாக வெற்றியை பாஜக பெற்றுள்ளது.
மேலும் பணமதிப்பிழப்பு, வங்கி கட்டணங்கள் எனப் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளுக்குப் பின் மத்தியில் ஆளும் கட்சி தேர்தலை எதிர்கொள்வதால் இந்தத் தேர்தல் முக்கியமாகப் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டும் அல்லாமல் அன்னிய முதலீட்டுக்கான தளர்வு, ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகியவை அடுத்து மோடி தலைமையிலான அரசு செயல்படுத்த உள்ள திட்டங்கள்.
மோடிக்கு வாய்ப்பு அதிகம்
இந்தியா முழுவதும் மக்களின் மனநிலை இதேப்போன்று இருந்தால், அடுத்தப் பிரதமராகவும் மோடி இருப்பார் என்பது எவ்விதமான சந்தேகமில்லை. இது நடந்து முடிந்த 5 மாநில தேர்தலை வைத்து மட்டுமே வெளியிடப்பட்ட கணிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூபாய் மதிப்பு
இத்தகைய சூழ்நிலையில் திங்கட்கிழமை நாணய சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 66.50 ரூபாயில் இருந்து 66.18 வரை உயர்ந்தது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகம்
இதனுடன் சர்வதேச பங்குச்சந்தை வர்த்தகத்தில் சீனா, ஹாங்காங், சிங்கப்பூர், ஜப்பான், தைவான் ஆகியவை அதிகளவிலான உயர்வைச் சந்தித்துள்ளது. இதன் மூலம் ஆளும் கட்சியான பாஜக-வின் வெற்றி, ரூபாய் மதிப்பு உயர்வு மற்றம் உலகச் சந்தை வர்த்தகத்தின் சாதகமான நிலையின் எதிரொலிகள் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் தெரியும்.
More From GoodReturns

ரூபாய் மதிப்பு வரலாற்று சரிவு.. 100-ஐ தாண்டுமா.. இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் சவால்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications