'இந்த' 5 பங்குகளை தாராளமாக வாங்கி போடுங்க.. லாபம் உறுதி.. பிரபுதாஸ் லில்லாதர் கணிப்பு..!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி நடவடிக்கையால் சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன. இந்திய பங்குச் சந்தைகளும் பலத்த அடி வாங்கின. இருப்பினும் டிரம்ப் வரி விதிப்பை தற்காலிகமாக ஒத்தி வைத்ததால் பங்குச் சந்தைகள் சரிவிலிருந்து மீள தொடங்கின. இதனால் முதலீட்டாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட தொடங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் வரி விதிப்புக்கு பிந்தைய காலத்தில் சிறப்பாக செயல்ட தயாராக இருக்கும் முதலீட்டுக்கு நம்பகான சிறந்த பங்குகளை பல தரகு நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.

பிரபல தரகு நிறுவனமான பிரபுதாஸ் லில்லாதர் கூறுகையில், 2024 அக்டோபர் முதல் 2025-26 மற்றும் 2026-27ம் நிதியாண்டுகளுக்கு நிஃப்டி இபிஎஸ் 6.2 மற்றும் 5.6 சதவீதம் குறைப்பை கண்டுள்ளது. வரி போர்கள் குறுகிய காலத்தில் மேலும் வருவாய் குறைப்புகளை தூண்டக்கூடும். இருப்பினும், உள்நாட்டு சார்ந்த துறைகள் சிறப்பாக செயல்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

'இந்த' 5 பங்குகளை தாராளமாக வாங்கி போடுங்க.. லாபம் உறுதி.. பிரபுதாஸ் லில்லாதர் கணிப்பு..!

மின்சாரம், மருந்து,சில்லரை விற்பனை,வங்கிகள் ஆகிய துறைகளை சார்ந்த பங்குகளை பார்க்கலாம். ஐடிசி,எரிஸ் லைஃப் சயின்சஸ்,ஐஆர்சிடிசி,கேஇஐ இண்டஸ்ட்ரீஸ் மற்றும் திரிவேணி டர்பைன் ஆகிய பங்குகள் நல்ல ஏற்றம் காணும் என்று பிரபுதாஸ் லில்லாதர் கணித்துள்ளது.

ஐடிசி
ஐடிசியின் 21xFY27 பிஇ விகிதம் கவர்ச்சிகரமான விலையில் இருப்பதாக பிரபுதாஸ் லில்லாதர் நம்புகிறது. இந்நிறுவனம் 4 சதவீதம டிவிடெண்ட் வழங்குகிறது. செஞ்சுரி பேப்பர் கையகப்படுத்தியது மற்றும் சிகரெட் மீதான கலால் வரி நிலையாக இருப்பது போன்றவை இந்நிறுவனத்துக்கு சாதகமான அம்சமாகும். இதனால் 2026ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கு பிறகு லாப வரம்புகள் உயரும். இப்பங்கின் இலக்கு விலை ரூ.524. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.420.70ஆக இருந்தது.

எரிஸ் லைஃப் சயின்சஸ்
இந்நிறுவனத்தில் பல்வேறு முன்னேற்ற வாய்ப்புக்களை தரகு நிறுவனம் பார்க்கிறது. ஜிஎல்பி-1 முயற்சி மற்றும் பயோகானின் பிராண்டட் வணிகம் உள்பட பல்வேறு துறை வணிகங்களில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் ROCE 20 சதவீதமாக உயர்ந்துள்ளதால், இப்பங்கு நீண்ட கால செயல்திறனுக்காக அமைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.1,376.55ஆக இருந்தது.

ஐஆர்சிடிசி
இப்பங்கின் விலை 18 சதவீதம் சரிந்துள்ளது. இரண்டு ஆண்டுகளில் PAT CAGR 9 சதவீதமாக இருக்கும். இ கேட்டரிங் வளர்ச்சி, ரயில் அல்லாத கேட்டரிங் மற்றும் வந்தே பாரத் ரயில்கள் மூலம் இந்நிறுவனம் முன்னேற்றம் கண்டு வருகிறது. இப்பங்கின் இலக்கு விலை ரூ.850ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.748.75ஆக இருந்தது.

கேஇஐ இண்டஸ்ட்ரீஸ்
2029-30ம் நிதியாண்டுக்குள் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.25,000 கோடியை எட்டும் என்று பிரபுதாஸ் லில்லிதார் எதிர்பார்க்கிறது. இது 20 சதவீத கூட்டு வளர்ச்சி விகிதத்தை குறிக்கிறது. ஏற்றுமதி 17 சதவீதம் உயரும். கடந்த 2023-24ம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் ஆர்ஓசிஇ 27.5 சதவீதமாக உள்ளது. பிரபுதாஸ் லில்லிதார் இப்பங்கின் இலக்கு விலை ரூ.4,278ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.2,711.20ஆக இருந்தது.

திரிவேணி டர்பைன்
உலகளாவிய எனர்ஜி மாற்றம் மற்றும் தொழில்துறை டர்பைன்களுக்கான தேவை ஆகியவற்றால் திரிவேணி டர்பைன் நிறுவனம் பயனடைய தயாராக உள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த ஆர்டர் புத்தகம் ரூ.1,820 கோடியாக உள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் ஏற்றுமதி மொத்த வருவாயில் 60 சதவீதத்துக்கும் அதிகமாக பங்களிக்கின்றன. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.503.90ஆக இருந்தது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+