பாலிவுட் திரைப்படங்களோடு தொடர்பு கொண்டு நிறுவனம் தான் பிரைம் ஃபோகஸ். இந்நிறுவனம் திரைப்பட தயாரிப்புகளுக்கான தொழில்நுட்பங்களை வழங்கி வருகிறது. செவ்வாய்க்கிழமை, இந்நிறுவன பங்கு திடீரென 10% வரை உயர்ந்து ரூ.191.62 என்ற உச்சத்தை எட்டியது.
செப்டம்பர் 3, 2025 முதல் செப்டம்பர் 9 செவ்வாய்க்கிழமை காலை வர்த்தகம் வரை, தொடர்ந்து ஐந்து நாட்களில் சுமார் 30% வரை இந்நிறுவன பங்கு உயர்ந்துள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன. மூன்று சிங்கப்பூர் நிறுவனங்கள் பிரைம் ஃபோகஸில் தங்கள் 3.8% பங்குகளை ரூ.188 கோடிக்கு வெளிச்சந்தை பரிவர்த்தனைகள் மூலம் விற்றுள்ளன. இதுவே நிறுவன பங்கு மதிப்பு உயர காரணமாகியுள்ளது.

பிஎஸ்இ-யில் கிடைக்கும் பிளாக் டீல் தரவுகளின்படி, சிங்கப்பூரை சேர்ந்த மூன்று நிறுவனங்களும் மொத்தம் 1.20 கோடி ஈக்விட்டி பங்குகளை, அதாவது பிரைம் ஃபோகஸில் மொத்தமாக 3.87% பங்குகளை விற்றுள்ளன. ஆகஸ்டா இன்வெஸ்ட்மென்ட்ஸ் I பிடிஇ லிமிடெட் , பிரைம் ஃபோகஸில் 62.24 லட்சம் ஈக்விட்டி பங்குகளை (2% பங்கு) விற்றது. இதேபோல், மரினா IV (சிங்கப்பூர்) பிடிஇ 48.31 லட்சம் பங்குகளையும், மரினா ஹொரைசன் (சிங்கப்பூர்) பிடிஇ லிமிடெட் 57.75 லட்சம் பங்குகளையும் (1.86% பங்கு) விற்றுள்ளன.
இந்த பரிவர்த்தனை சுமார் ரூ.187.86 கோடி மதிப்புடையது. ஒரு பங்கு ரூ.156.55 என்ற சராசரி விலையில் இந்த விற்பனை நடந்துள்ளது. இந்த சமீபத்திய பரிவர்த்தனைக்குப் பிறகு, ஆகஸ்டா இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் பிரைம் ஃபோகஸில் உள்ள பங்கு 10.89%-லிருந்து 8.89% ஆகக் குறைந்துள்ளது. மேலும், மரினா IV (சிங்கப்பூர்) நிறுவனத்தின் பங்கு 7.55%-லிருந்து 5.99% ஆக குறைந்துள்ளது. ரமேஷ் தமானி, மதுசூதன் கேலா போன்ற பெரிய முதலீட்டாளர்கள் இந்த பங்குகளை வாங்கி இருப்பது இதன் மீது நம்பிக்கையை அதிகரிக்க செய்து பங்கு மதிப்பையும் உயர்த்தியுள்ளது.
பிரைம் ஃபோகஸ் லிமிடெட் என்பது ஒரு இந்திய நிறுவனம். இது மீடியா உருவாக்கம் மற்றும் திரைப்படங்களுக்கான போஸ்ட்-புரொடக்ஷன் சேவைகளை வழங்குகிறது. வியூ-டி, க்ளியர் மற்றும் டாக்ஸ் டிஜிட்டல் டெய்லிஸ் போன்ற தொழில்நுட்பங்களை இந்நிறுவனம் பயன்படுத்துகிறது. அதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் படைப்பு சேவைகள், தொழில்நுட்ப/தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் ஆகியவை அடங்கும்.
பிப்ரவரி 2025-இல், பிரைம் ஃபோகஸ் அதன் டிஎன்இஜி குழுமத்தின் பிரம்மா மூலம் AI உள்ளடக்க உருவாக்க தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் மெட்டாஃபிசிக்கை கையகப்படுத்தியது.இது அந்நிறுவனத்தின் புரொடெக்ஷன் திறனை மேம்படுத்தும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தி இருக்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications