ஐடியா செல்லுலார் பங்குகள் 4% திடீர் சரிவு.. என்ன காரணம்..?
மும்பை: இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் புதிய டெலிகாம் சேவை நிறுவனமான, ஜியோ உடன் போட்டி போட பெரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்கள் வாங்கத் திட்டமிட்டுக்கொண்டு இருக்கிறது.
இதற்கு அடித்தளம் அமைத்ததே ஐடியா செல்லுலார் தான். ஆம், ஜியோ இலவசங்களைக் கண்டு கடுப்பான ஏர்டெல் தனது கட்டணத்தைத் தொடர்ந்து குறைக்கத் திட்டமிட்டு இருந்த நிலையில், ஐடியா செல்லுலார் ஜியோவின் போட்டியை மறைமுகமாக எதிர்கொள்ளத் திட்டமிட்டது.
இந்தத் திட்டத்தால் மளமளவென உயர்ந்த ஐடியா செல்லுலார் பங்குகள், திங்கட்கிழமை வர்த்தகத்தில் சுமார் 4 சதவீதம் வரை சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இத்தகைய சரிவிற்கு என்ன காரணம்..?
மறைமுகத் திட்டம்..
ஜியோ உடன் போட்டி போட ஆரம்பகட்டத்தில் கட்டண குறைப்பில் ஈடுப்பட்ட ஐடியா செல்லூலார், நிதானமாக யோசித்துக் கூட்டணி நிறுவன திட்டத்தைக் கையில் எடுத்தது.
இந்திய சந்தையில் 2வது மற்றும் 3ஆம் இடத்தில் இருக்கும் ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்கள் முழுமையாக இணையத் திட்டமிட்டது.
பங்குகள் தடாலடி உயர்வு...
இத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே ஐடியா நிறுவனப் பங்குகளை மளமளவென உயர்ந்தது.
2017ஆம் ஆண்டில் மட்டும் ஐடியா செல்லுலார் நிறுவனப் பங்குகள் சுமார் 53 சதவீதம் வரை உயர்ந்தது இந்நிறுவனப் பங்குகள் 114.60 ரூபாய் வரையில் உயர்ந்தது. ஆனால் திங்கட்கிழமை வர்த்தகத்தில் முதலீட்டாளர் ஒருவரின் செயலால் சுமார் 4 சதவீதம் வரை சரிந்துள்ளது.
பிராவிடென்ஸ்
தனியார் முதலீட்டு நிறுவனமான பிராவிடென்ஸ் நிறுவனம் ஐடியா செல்லுலார் நிறுவனத்தில் வைத்திருத்த 3.33 சதவீத பங்குகளை இந்திய பங்குச்சந்தையில் பல்க் டீல் மூலமாக விற்பனை செய்தது.
இந்த விற்பனை பிப்ரவரி 28ஆம் தேதி நடைபெற்றுள்ளதாக இந்த முதலீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
190 மில்லியன் டாலர்
பிராவிடென்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஐடியா செல்லுலாரின் 3.33 சதவீத பங்குகளை 190 மில்லியன் டாலர், அதாவது 1,267.5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது.
இந்தப் பங்குகளை ஐடியா செல்லுலார் நிறுவனமே வாங்கியதால், இந்நிறுவனத்தின் தனது பங்கு விகிதம் 53 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதே விற்பனையின் காரமாகத் தான் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 4 சதவீதம் வரை குறைந்துள்ளது.
விற்பனை
பிராவிடென்ஸ் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் மத்தியில் நடைபெற்ற பங்கு பரிவர்த்தனையில் ஒரு பங்கின் விலை 106.5 ரூபாயில் இருந்து 114.55 ரூபாய் வரையிலான தொகைக்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
பி5 ஏசியா இன்வெஸ்ட்மென்ட்
அதேபோல் மற்றொரு தனியார் முதலீட்டு நிறுவனமான பி5 ஏசியா இன்வெஸ்ட்மென்ட் (Mauritius) 2006ஆம் ஆண்டு ஐடியா நிறுவனத்தில் 15 சதவீத பங்குகளை 1800 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்து வாங்கியது.
கடந்த சில வருடங்களாக இந்த முதலீட்டுத் தனது பங்கு இருப்பைக் குறைத்து வந்த நிலையில், ஜூன் 2016ஆம் ஆண்டு வரையில் இந்த முதலீட்டு நிறுவனம் 3.47 சதவீத பங்குகளை 1,383 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது.
ஆதித்யா பிர்லா
ஐடியா செல்லுலார் நிறுவனம் ஆதித்யா பிர்லா குழுமத்தின் டெலிகாம் பிரிவாகும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா குழுமத்தைப் போலவே இந்தியாவில் பல பிரிவுகளில், துறைகளில் வர்த்தகம் செய்து வருகிறது.
ஐடியா செல்லுலார் பங்கு வர்த்தகம்
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications