பொது தேர்தலின் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியானதிற்குப் பின்பு, மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளில் புதிய வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது.
இதன் எதிரொலியாக, ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் சந்தை மூலதனம் கிட்டத்தட்ட 12 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

மோடி தலைமையிலான ஆட்சியில் பொதுத்துறை நிறுவன பங்குகள் அதிகப்படியான வளர்ச்சியைப் பதிவு செய்து வரும் வேளையில், தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முந்தைய காலகட்டத்தில் சில தடுமாற்றத்தைச் சந்தித்தது. ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப் பின்பு மீண்டும் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடையத் துவங்கியது.
ஜூலை 4ஆம் தேதிக்குப் பின்பு பொதுத்துறை நிறுவனங்களின் சந்தை மதிப்பு 12 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியிருக்கும் வேளையில், 2024ஆம் ஆண்டில் இதுவரை கிட்டத்தட்ட 22.5 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பைப் பெற்றுள்ளன.
இதன் காரணமாக தற்போது அதீத மதிப்பீட்டைப் பயன்படுத்தி நிதி திரட்டும் நோக்கில் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய தூண்டப்படலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. இதற்கான டிஸ்இன்வெஸ்ட்மென்ட் டார்கெட் அளவை ஜூலை 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார்.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, மீண்டும் ஆட்சியை மோடி அரசு கைப்பற்றியதால் அதன் கொள்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது. இதனால் பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சி தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான லாபம் கிடைக்கிறது.
ஜூலை 1ஆம் தேதி முதல் ரயில் விகாஸ், இந்தியன் ரினிவபிள், ஷிப்பிங் கார்ப்பரேஷன், மசகான் டாக், ஆயில் இந்தியா, ரெயில்டெல் கார்ப் மற்றும் கொச்சின் ஷிப்யார்டு போன்ற நிறுவனங்களின் பங்குகள் 25% முதல் 50% வரை உயர்ந்துள்ளன. இதன் வாயிலாக தான் பொதுத்துறை நிறுவனங்களின் சந்தை மூலதனம் கிட்டத்தட்ட 12 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
மார்ச் 31, 2024 நிலவரப்படி, LIC, IRFC, Uco Bank உள்ளிட்ட சுமார் 10 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் மத்திய அரசு 75% க்கும் அதிகமான பங்குகளை வைத்திருந்தது. செபியின் விதிமுறைகள் படி பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட எந்தொரு நிறுவனத்திலும் அதன் முதலீட்டாளர்கள் அல்லது ப்ரோமோட்டர்கள் 75 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்க கூடாது.
இதன் அடிப்படையில் மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் செபியின் விதிமுறைகளுக்கு இணங்குவதற்காக 75% க்கும் அதிகமாக இருக்கும் நிறுவன பங்குகளை விற்பது குறித்த அறிவிப்பை வெளியிடலாம். மேலும் இதன் வாயிலாக மத்திய அரசு தனது டிஸ்இன்வெஸ்ட்மென்ட் டார்கெட்-ஐ அடைய முடியும்.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு 50000 கோடி ரூபாய் மதிப்பிலான டிஸ்இன்வெஸ்ட்மென்ட் டார்கெட் வைத்தது, பின்னாளில் இதை 30000 கோடி ரூபாய் வரையில் குறைத்தது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் டார்கெட் அளவை பார்த்தால் மட்டுமே மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்க எந்த அளவுக்கு ஆர்வமாக உள்ளது என்பது தெரிய வரும்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications