அதானி குழும நிறுவனங்களில் எல்ஐசி உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது பெரும் விவாத பொருளாகியுள்ளது. இதில் எல்ஐசி மற்றும் எஸ்பிஐ மட்டும் அல்ல, பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களான நியூ இந்தியா, யுனைடெட் இந்தியா, நேஷனல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் மற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்களும் 348 கோடி ரூபாய் முதலீட்டினை செய்துள்ளன.
இதே நிதி நிறுவனங்களில் எக்ஸிம் வங்கி, சிட்டி, NHB, நேஷனல் வங்கி மற்றும் NBFID, NABARD உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது முதலீட்டு விவரங்களை சட்டப்படி வெளியிட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்ஐசி முதலீடு
எல்ஐசி நிறுவனம் அதானி குழுமத்தில் 36,000 கோடி ருபாய் முதலீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது அதானி குழுமத்தில் 0.975% அளவுக்கு பங்கினை வைத்துள்ளது.
அமெரிக்காவின் பிரபல ஷார்ட் செல்லரான ஹிண்டர்ன்பர்க் நிறுவனம், அதானி குழுமத்தின் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தியது. அதானி குழும நிறுவனங்களில் 1 - 3 ஆண்டுகளாக முதலீடு செய்து வருவதாக எல்ஐசி நிறுவனத்தின் தலைவர் எம் ஆர் குமார் தெரிவித்துள்ளார்.
மோசடி
கடந்த ஜூன் 24ல் இருந்து கடந்த 7 நிறுவனங்களின் சந்தை ,மதிப்பானது 100 பில்லியன் டாலர்களுக்கு மேலாக சரிவினைக் கண்டுள்ளது. இது அதானி குழும நிறுவனங்கள் பங்கு சந்தையில் பங்குகளை உயர்த்த, போலியான வரவு செலவு அறிக்கை, வரி ஏய்ப்பு, போலியான பரிவர்த்தனை என பல குற்றச்சாட்டுகளை சுமத்திய நிலையில் சரிவினைக் கண்டுள்ளது.
தரமிறக்கிய மூடீஸ்
மூடீஸ் நிறுவனம் அதானி கிரீன் எனர்ஜி மற்றும் மூன்று நிறுவனங்களின் மதிப்பீட்டினை குறைத்துள்ள நிலையில், அதன் சந்தை மதிப்பும் சரிவினைக் கண்டுள்ளது.
MSCI அமைப்பு அதானி எண்டர்பிரைசஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ், ஏசிசி லிமிடெட் உட்பட 4 அதானி குரூப் நிறுவனங்களின் ப்ரீ ப்ளோட் வெயிட்டேஜ் குறைப்பதாக அறிவித்தது. இது பிப்ரவரி 28ல் இருந்து அமலுக்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ளது.
நம்பிக்கை சரிவு
இதற்கு முன்பாக அதானி குழுமம் 2.5 பில்லியன் டாலர் மதிப்பிலான FPO திட்டத்திற்கு முழுமையான முதலீட்டை பெற்ற பின்பும் கூட, முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் நஷ்டத்தைக் கருத்தில் கொண்டு ரத்து செய்வதாக அறிவித்தது. இதுவும் அதானி குழுமப் பங்குகள் அதிகளவிலான சரிவை காண முக்கிய காரணியாக அனைந்தது. இப்படி பற்பல காரணிகளும் அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கையை சீர்குலைத்துள்ளது.


Click it and Unblock the Notifications