அஷோக் லைலாண்டு ஜூன் காலாண்டு அறிக்கை வெளியீடு.. வருவாய் 47 சதவீதம் உயர்வு!
அஷோக் லைலாண்டு நிறுவனம் எதிர்பார்த்தை விடக் கடந்த 2 வருடம் இல்லாத காலாண்டு லாபத்தினைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

பேருந்து மற்றும் டிரக் வணிகத்தில் அஷோக் லைலாண்டின் நிகர லாபம் 233 சதவீதம் உயர்ந்து ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 370 கோடி ரூபாயினைப் பெற்றுள்ளது.
அஷோக் லைலாண்டின் வருவாய் 6,340 கோடி ரூபாய் ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 47 சதவீதம் உயர்ந்து 6,250 கோடி ரூபாயினைப் பெற்றுள்ளது. ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 42,127 வாகனத்தினை விற்றுள்ளது.
வரி செலுத்துவதற்கு முந்தைய வருவாய் 111 சதவீதம் உயர்ந்து 648 கோடி ரூபாயாகவும், ஆப்ரேட்டிங் மார்ஜின் 7.2 சதவீதத்தில் இருந்து 10.4 சதவீதமாகவும் பதிவு செய்துள்ளது.
சந்தை நேர முடிவில் அஷோக் லைலாண்டு பங்குகள் 2.75 புள்ளிகள் என 2.19 சதவீதம் உயர்ந்து 128.50 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications