1 வருடத்தில் 200% லாபமா.. ராதாகிஷன் தமனி போர்ட்போலியோ பங்கு.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

பொதுவாக நீண்டகால நோக்கில் முதலீடு செய்ய பங்கு சந்தையும் சிறந்த லாபகரமான ஆப்சனாக இருக்கும். எனினும் சிறந்த பங்கினை தேர்ந்தெடுப்பது மிக அவசியமான ஒன்று.

இன்றைய காலகட்டத்தில் பங்கு சந்தைக்குள் புதியதாக நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஆக இந்த சமயத்தில் இது போன்ற பங்குகள் மிக பயனுள்ளதாக இருக்கலாம்.

அந்த வகையில் கடந்த 1 ஆண்டில் நல்ல லாபம் கொடுத்த ஒரு பங்கினை பற்றித் தான் நாம் இன்று பார்க்கவிருக்கிறோம்.

ஓராண்டு நிலவரம்

ஓராண்டு நிலவரம்

பொதுவாக நடப்பு ஆண்டில் கெமிக்கல் பங்குகள் நல்ல லாபத்தினை கொடுத்துள்ளன. அப்படி நல்ல லாபம் கொடுத்த ஒரு பங்கினைத் தான் ராதா கிஷன் தமனியும் வாங்கி வைத்துள்ளார். அது பெட்ரோகெம் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு தான். இது ஒரு மல்டி பேக்கர் பங்காகும். இந்த பங்கு விலையானது கடந்த 1 ஆண்டில் 101.05 ரூபாயில் இருந்து 317.75 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கிட்டதட்ட 214% லாபத்தினை கொடுத்துள்ளது.

இன்றைய நிலவரம்

இன்றைய நிலவரம்

இன்றைய சந்தையானது பலவீனமாக இருந்த நிலையிலும் கூட, இந்த பங்கின் விலையானது என் எஸ் இ-யில் இன்று காலை நல்ல ஏற்றத்தினை கண்டிருந்தது. முடிவில் 0.98% அதிகரித்து, 313.85 ரூபாயாக முடிவுற்றுள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 317.75 ரூபாயாகவும், இன்றைய குறைந்தபட்ச விலை 311 ரூபாயாகவும் உள்ளது.

இதே பி.எஸ்.இ-யில் முடிவில் 0.72% அதிகரித்து, 313.55 ரூபாயாக முடிவுற்றுள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 317.75 ரூபாயாகவும், இன்றைய குறைந்தபட்ச விலை 309 ரூபாயாகவும் முடிவுற்றுள்ளது. இதன் 52 வார உச்ச விலை 332.55 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 92.05 ரூபாயாகும்.

 சந்தை மதிப்பு

சந்தை மதிப்பு

இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 1889 கோடி ரூபாயாகும்.

இதற்கிடையில் இந்த பங்கின் விலையானது 20 நாள், 50 நாள், 100 நாள், 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜுக்கு மேலாகவும், இதே 5 நாள் மூவிங் ஆவரேஜ்ஜுக்கு கீழாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

5 ஆண்டு நிலவரம்

5 ஆண்டு நிலவரம்

இப்பங்கின் விலையானது கடந்த 5 ஆண்டுகளில் 300% ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த 10 ஆண்டுகளில் 800% ஏற்றம் கண்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் PAT மற்றும் EBITDA விகிதமானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் இந்த பங்கின் விலையானது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஃபண்டமெண்டல் மற்றும் டெக்னிக்கல் ரீதியாகவும் சாதகமாக உள்ளது. இதனால் இந்த பங்கின் விலையானது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

லாபம்

லாபம்

இந்த நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டில் நிகரலாபம் 235% அதிகரித்து, 61.92 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 18.4 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே வருவாய் விகிதமானது செப்டம்பர் 2021 காலாண்டில் 564 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 326 கோடி ரூபாயாக இருந்தது.

ராதாகிஷன் தமனி வசம்

ராதாகிஷன் தமனி வசம்


ஷேர்ஹோல்டிங் பேட்டர்ன் படி, முக்கிய முதலீட்டாளரான ராதாகிஷன் தமனி வசம் டிசம்பர் காலாண்டில் 1.26% பங்குகள் உள்ளன.

பனாமா பெட்ரோகெம் லிமிடெட் நிறுவனம், 80-க்கும் மேற்பட்ட பொருட்களை உற்பத்தி செய்கின்றது. இது தொழிற்சாலைகளில் பலவும் பயன்படுத்தப்படுகிறது. இது மைகள், பிசின்கள், ரப்பர், ஜவுளி, அழகுசாதன பொருட்கள், மின்சாரம், கேபிள்கள் மற்றும் பிற தொழிற்துறைகளில் பயன்படுத்தப்படுகின்றது.

எங்கு அமைந்துள்ளது?

எங்கு அமைந்துள்ளது?

இந்தியாவில் இந்த நிறுவனம் 4 மிகப்பெரிய ஆலைகளை கொண்டுள்ளது. இது அதி நவீன தொழில் நுட்பம் மற்றும் பல்வேறு வசதிகளுடன் உள்ளது. இது அங்கலேஷ்வர் (குஜராத்), டாமன் (யூனியன் பிரதேசம்), தாமன் (குஜ்ராத்), தலோஜா (ராய்காத்) உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+