இந்தியாவில் ஆர்கானிக்ஸ் பொருட்களுக்கான மவுசு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் ஆர்கானிக் பொருட்கள் சம்பந்தமான வணிகத்தினை செய்து வரும் மங்கலம் ஆர்கானிக் பங்கினை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
இந்திய சில்லறை வர்த்தக சந்தையில் தனக்கென தனி இடம் பதித்துள்ள டிமார் நிறுவனத்தின் தலைவர் தான் ராதாகிஷன் தமனி. இவர் வணிகர் மட்டும் அல்ல, முதலீட்டாளரும் கூட.
இவர் பங்கினை வைத்துள்ள மல்டி பேக்கர் பங்கான மங்கலம் ஆர்கானிக், கடந்த 12 மாதங்களில் பெரியளவிலான லாபத்தினை கொடுத்துள்ளது.
இன்றைய நிலவரம் என்ன?
மங்கலம் ஆர்கானிக் பங்கானது என்எஸ்இ-ல் இன்று 1.53% ஏற்றம் கண்டு, 996. 30 ரூபாயாக அதிகரித்து முடிவடைந்துள்ளது. இன்றைய உச்சம் 1009 ரூபாயாகும், இன்றைய குறைந்தபட்ச விலை 981 ரூபாயாகும்.
இதே பிஎஸ்இ-யில் சற்று அதிகரித்து, 984.25 ரூபாயாக அதிகரித்து முடிவடைந்துள்ளது. இன்றைய உச்ச விலை 1007.65 ரூபாயாகவும், இன்றைய குறைந்தபட்ச விலை 983.05 ரூபாயாகவும் உள்ளது. இன்றைய 52 வார உச்ச விலை 1300 ரூபாயாகும். இதே 52 வார குறைந்தபட்ச விலை 403 ரூபாயாகும்.
டெக்னிக்கல் பேட்டர்ன்
மங்கலம் ஆர்கானிக் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 858 கோடி ரூபாயாக உள்ளது. இதற்கிடையில் 5 நாள், 50 நாள், 100 நாள், 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜுக்கு மேலாக வர்த்தகமாகி வருகின்றது. இதே 20 நாள் மூவிங் ஆவரேஜ்ஜுக்கு கீழாக வர்த்தகமாகி வருகின்றது.
ஓராண்டு நிலவரம்
இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த ஆண்டு 404.85 ரூபாயில் இருந்து 1007.65 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் இந்த பங்கின் விலையானது 149% அதிகரித்துள்ளது. இந்த பங்கின் விலையானது நீண்டகால நோக்கில் பார்க்கும்போது 2,900 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.
10 ஆண்டு நிலவரம்
இதே கடந்த 10 ஆண்டுகளில் 4,000 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கானது அவுட்லுக் ஆனது பாசிடிவ் ஆக காணப்படுகின்றது. இந்த நிறுவனம் கடன் இல்லா ஒரு நிறுவனமாக உள்ளது. இது கடந்த ஒரு ஆண்டில் 78.13% அதிகரித்துள்ளது.
அடுத்த இலக்கு
இந்த பங்கின் அவுட்லுக்கானது பாசிட்டிவ்வாக உள்ளது. இதன் பங்கு விலையின் இலக்கு விலை 1,650 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்த சில காலாண்டில் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து 4 காலாண்டுகளாகவே பாசிட்டிவாக இருந்து வருகின்றது.
ராதாகிஷன் தமனி வசம்
முக்கிய முதலீட்டாளரான ராதாகிஷன் தமனி செப்டம்பர் காலாண்டு முடிவில் 4.3% ஆக பங்கு விகிதத்தினை அதிகரித்துள்ளார். இது ஜூன் காலாண்டு நிலவரப்படி 2.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications