கடுமையான பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்கள் மற்றும் பரவலான வீழ்ச்சிகள் நிலவும் காலகட்டத்தில் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என எடெல்விஸ் மியூச்சுவல் ஃபண்டின் தலைவர் ராதிகா குப்தா முக்கியமான அட்வைஸ் கொடுத்துள்ளார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சந்தை வீழ்ச்சியின் போது கற்றுக் கொண்ட பாடங்களை அடிப்படையாகக் கொண்டு முதலீட்டாளர்களுக்கு ஒரு முக்கிய ஆலோசனையை வழங்கியுள்ளார். சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கொரோனா தொற்று மூலம் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் வாயிலாக முதலீட்டுச் சந்தைகள் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைச் சந்தித்த நேரத்தைத் தான் ராதிகா குப்தா குறிப்பிடுகிறார்.

இதுபோன்ற மோசமான காலகட்டத்தைச் சமாளிக்க எப்போதும் ஒரு அவசரக்கால நிதியை வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார், இதேபோல் இக்காலகட்டத்தில் அமைதியாக இருக்கவும் அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம், கடைசியாக நீண்ட கால முதலீட்டு இலக்கில் முதலீடு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். இந்த அணுகுமுறை, மோசமான சந்தை வீழ்ச்சியின் போது பயனுள்ளதாக இருந்தது, இனியும் இருக்கும், என்று ராதிகா குப்தா கூறுகிறார்.
கொரோனா காலத்தில் முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் மார்டன் முதலீட்டு சந்தையை எதிர்கொள்ள ஒகு பாடத்தை வழங்கியது என்று கூறும் அவர் எப்போதும் ஒரு குடும்பம் போதுமான பண இருப்புக்களைப் பராமரிப்பதன் அவசியத்தை திரும்ப திரும்ப வழியுறுத்திகிறார்.
இன்றைய பொருளாதார சூழ்நிலையில் சவாலான காலங்களைத் தவிர்க்க முடியாதவை என்றாலும், ஒவ்வொரு முறையும் பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும் போதும் சில மாதங்களில் சரிவில் இருந்து சந்தை மீண்டு வருவதைப் பார்க்க முடிகிறது. இதனால் முதலீட்டாளர்கள் இறுதியில் வெற்றி பெறுவது நிச்சயம், ஆனால் இந்த வெற்றியைச் சுவைக்க நாம் தயாராக இருக்கிறோமா என்பது தான் கேள்வியாக உள்ளது.
2008 மற்றும் 2020 சந்தை நெருக்கடிகளுக்கு இணையாக தற்போதைய முதலீட்டுச் சந்தையின் வீழ்ச்சி பார்க்கப்படுகிறது. இதேபோல் ராதிகா குப்தா பிப்ரவரி மாதம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " பங்குச்சந்தை சரிவு ஏற்படும் போது நரகம் போல் இருக்கும், 2008-லும் அப்படிதான் இருந்தது, 2020-லும் அப்படிதான் இருந்தது. ஆனால் நாம் எப்போதும் செய்வது போல் காத்திருந்தால், நாம் அனைவரும் சரிவில் இருந்து மீண்டு வருவோம். கெட்ட நேரங்கள் வெகுநாள் நீடிக்காது. நல்ல முதலீட்டாளர்கள் கட்டாயம் லாபம் அடைவார்கள்." என்று அவர் கூறினார்.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications