ராகவ் புரொடக்டிவிட்டி என்ஹான்சர்ஸ் நிறுவனமானது ஸ்மால் கேப் வகையைச் சேர்ந்த சுரங்கத் துறை பங்கு ஆகும். இது அதன் பங்குதாரர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட போனஸ் பங்குகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட பதிவு தேதியைத் திருத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. சமீபத்தில், இந்த நிறுவனம் அதன் பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
அதாவது, நிறுவனத்தின் ஒரு பங்கை வைத்திருக்கும் பங்குதாரர்களுக்கு போனஸாக மேலும் ஒரு பங்கு கிடைக்கும். அதேபோல், இந்த பங்கு ஒரு மல்டிபேக்கர் பங்காக மாறியுள்ளது, அதன் பங்குதாரர்களுக்கு கடந்த நான்கு மாதங்களில் சுமார் 62 சதவீத லாபத்தை அளிக்கிறது. இந்த நிறுவனம் ஆகஸ்ட் 08, 2024 அன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. இந்த போனஸ் பங்குகளின் இந்த வெளியீடு நிறுவனத்தின் வரலாற்றில் முதல் முறையாகும்.

நேற்றைய நவம்பர் 06 அன்று நிறுவனத்தின் பங்குச் சந்தை தாக்கல் செய்த அறிக்கையின் படி, நிறுவனத்தின் வாரியம் சமீபத்தில் 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க பரிந்துரைத்துள்ளது, அதாவது பதிவு தேதியின்படி, டீமேட் கணக்கில் ரூ.10 முக மதிப்பு கொண்ட ஈக்விட்டி பங்கு வைத்துள்ள நபர்களுக்கு கூடுதலாக ரூ. 10 முகமதிப்பு கொண்ட மேலும் ஒரு போனஸ் ஈக்விட்டி பங்கை வழங்குவதற்கு நிறுவனத்தின் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், தகுதியான பங்குதாரர்களை நிர்ணயம் செய்வதற்காக முன்னர் அறிவிக்கப்பட்ட நவம்பர் 15, 2024 என்ற பதிவு தேதியை நவம்பர் 29, 2024 என மாற்றியமைத்துள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்றைய வர்த்தக அமர்வில், ராகவ் புரொடக்டிவிட்டி என்ஹான்சர்ஸ் லிமிடெட் பங்கு விலை சுமார் 3.6 சதவீதம் அதிகரித்து ரூ. 1590 க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூ. 1600 ஆகவும், அதே போல் 52 வார குறைந்தபட்ச விலை ரூ. 951.05 ஆகவும் உள்ளது. மேலும் இந்த பங்கு அதன் பங்குதாரர்களுக்கு கடந்த வாரத்தில் சுமார் 17 சதவீத லாபத்தையும், கடந்த மாதத்தில் சுமார் 50 சதவீத லாபத்தையும் வழங்கியுள்ளது, கடந்த நான்கு மாதங்களில் சுமார் 59 சதவீத லாபத்தையும் கொடுத்துள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 3580 கோடி ஆக உள்ளது.
ராகவ் புரொடக்டிவிட்டி என்ஹான்சர்ஸ் ஆனது உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஃபெரோ அலாய்ஸ், ரேமிங் மாஸ், சிலிக்கா ராம்மிங் மிக்சஸ், பிக் அயர்ன் போன்றவற்றை தயாரித்து ஏற்றுமதி செய்வதில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தின் தலைமையகம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ளது. இந்த நிறுவனம் 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் தற்போது 123 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!



Click it and Unblock the Notifications