இந்தியன் ரயில்வே சாமானிய மக்களின் நெடுந்தூர பயண கனவுகளை சாத்தியமாக்கி வருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. மேலும் மத்திய அரசும் ரயில் சேவைகளை விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், 2023ல் 290 உயிர் இழப்புக்கு காரணமான ஒடிசா ரயில் விபத்து உள்ளிட்ட அடிக்கடி நடக்கும் விபத்துக்கள் பாதுகாப்பு குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ரயில்வே நெட்வொர்க்கை நவீனமயமாக்கல் தேவை அவசியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 3 பெரிய ரயில் விபத்துக்கள் நிகழ்ந்தது. மேலும், அந்த ஆண்டில் 70க்கும் மேற்பட்ட ரயில் தடம் புரண்ட சம்பவங்கள் நடந்தது. இதனால் ரயில் பாதுகாப்புக்காக உடனடியாக முதலீடு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பிப்ரவரி 1ம் தேதியன்று 2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். எதிர்வரும் பட்ஜெட்டில் ரயில்வேக்கான ஒதுக்கீடு 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் ரயில்வேயின் முதலீட்டு செலவினத்துக்காக ரூ.2.65 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது.
இது எதிர்வரும் நிதியாண்டுக்கு ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். தினமும் பயணிக்கும் 2.3 கோடி பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது எதிர்வரும் பட்ஜெட்டில் முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.
ரயில்வே நிலையங்களை மேம்படுத்துதல், நவீன ரயில்களை அறிமுகம் செய்தல், ரயில் பாதைகள் அமைத்தல் போன்ற ரயில்வேயை நவீனமயமாக்கல் பணிகளுக்கு பட்ஜெட்டில் ரயில்வேக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பது அவசியமாகும். வந்தே பாரத் ரயில்கள், மெட்ரோ இணைப்பு திட்டங்கள் அறிமுகம் போன்ற நடவடிக்கைகள் நெட்வொர்க்கை நவீனமயமாக்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பாதுகாப்பு சவால்கள் இன்னும் கடுமையாக உள்ளது.
2024-25ம் நிதியாண்டில் ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும்பகுதி, வந்தே பாரத் ரயில்கள், ரயில் பாதை மின்மயமாக்கல் ஆகிய நவீனமாயக்கல் திட்டங்களில் செலவிடப்பட்டதாக ரயில்வேயின் சமீபத்திய செலவின அறிக்கையில் செலவிடப்பட்டுள்ளது. புல்லட் ரயில் திட்டத்தை மேற்பார்வையிடும் நிறுவனமான என்எச்எஸ்ஆர்சிஎல் நிறுவனத்துக்கு இந்தியன் ரயில்வே ரூ.21 ஆயிரம் கோடி ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் நிதியாண்டில் இந்த நிறுவனத்துக்கான ஒதுக்கீட்டை ரயில்வே கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொலைதூர பயணங்களில் பயணிகளுக்கு சொகுசு வசதியை வழங்கும் வகையில், வரும் நிதியாண்டில் வந்தே ஸ்லீப்பர் ரயில்களை ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகளால் ரயில்வே துறையை சேர்ந்த நிறுவன பங்குகளின் விலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆர்.வி.என்.எல்., இர்கான், ஆர்ஐடிஇஎஸ், ஐஆர்எஃப்சி, ரயில்டெல், பிஇஎம்எல், ஜூபிடர் வேகன்ஸ், டெக்ஸ்மாகோ, ஒரியண்டல் ரயில், ராமகிருஷ்ணா போர்ஜிங்ஸ் மற்றும் திதாகர் ரயில் உள்ளிட்ட பங்குகள் முதலீட்டாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
Story written by: Subramanian
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications