மும்பை: இந்திய பங்குச்சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் ஐபிஓ வெளியீடு செய்து பட்டியலாகி வருகின்றன. அந்த வகையில் அண்மையில் வெளியான ஒரு ஐபிஓ மூலம் இந்தியாவின் புகழ்பெற்ற முதலீட்டாளர் ராகேஷ் ஜூன் ஜூன்வாலா குடும்பத்தினர் தாங்கள் செய்த முதலீட்டை விட 530 மடங்கு லாபம் ஈட்டி இருப்பது தெரியவந்துள்ளது.
சுகாதாரப் பிரிவில் செயல்பட்டு வரக்கூடிய ஐகேஎஸ் (Inventurus Knowledge Solutions -IKS) நிறுவனம் அண்மையில் ஐபிஓ வெளியீடு செய்தது. இந்த நிறுவனத்தில் 2007ஆம் ஆண்டிலேயே ராகேஷ் ஜூன்ஜூன்வாலா குடும்பத்தினர் முதலீடு செய்திருந்தனர். 2500 கோடி ரூபாய்க்கு இந்த நிறுவனம் ஐபிஓ வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில் 19ஆம் தேதி அன்று ஐகேஎஸ் நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டன. அப்போது ஐபிஓ வெளியீட்டில் ஒரு பங்கின் விலை 1329 ரூபாய் என மதிப்பிடப்பட்ட நிலையில் அதை விட 43 சதவீதம் விலை உயர்ந்து 1900 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகின.
இந்த ஐபிஓ வெளியீட்டின் ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவின் மூன்று பிள்ளைகளுக்கு சொந்தமான அறக்கட்டளை 33,57, 900 பங்குகளை ஆஃபர் ஃபார் சேல் முறையில் விற்பனை செய்தன. இது அவர்கள் முதலீடு செய்த தொகையை விட 530 மடங்கும் லாபமாக கிடைத்துள்ளதாம். இந்த நிறுவனத்தில் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா பிள்ளைகள் மற்றும் மனைவி என இரண்டு பிரிவாக பங்குகள் இருக்கின்றன.
இதில் குழந்தைகள் வசம் இருந்த 8.94 கோடி பங்குகளில் 33 லட்சம் பங்குகளை ஐபிஓ வெளியீட்டின் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்களுக்கு 530 மடங்கு லாபம் கிடைத்திருப்பதாக எக்னாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது இந்த நிறுவனத்தில் பிரமோட்டர்கள் வசம் இருக்கும் பங்குகளின் அளவு 69.73 சதவீதத்திலிருந்து 65.79 சதவீதம் என குறைந்துவிட்டது.
அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மருத்துவ நிறுவனங்களுக்கு தேவையான பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனம்தான் ஐகேஎஸ். கடந்த சில ஆண்டுகளாகவே இந்த நிறுவனத்தின் வருமானம் ஆண்டுக்கு 54 சதவீதம் என்ற வகையில் வளர்ச்சி அடைந்து வருகிறது.
2024 செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இந்த நிறுவனம் சர்வதேச அளவில் 778 வாடிக்கையாளர்களை கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆறு மாத காலத்தில் இந்த நிறுவனத்தின் வருமானம் 1283 கோடி ரூபாய் ஆகும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications