இந்திய பங்கு சந்தையின் தந்தை என்று அழைக்கப்படும் ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவின் போர்ட்போலியோவில் ஒரு பங்கு உள்ளது என்றாலே, அது கவனிக்கப்பட வேண்டிய பங்கு, என்ற எண்ணம் முதலீட்டாளர்கள் மத்தியில் உண்டு.
அதிலும் குறிப்பாக ஓராண்டாகவே போர்ட்போலியோவில் ஹோல்டு செய்து வைத்துள்ளார். எனில் அது கவனிக்கப்பட வேண்டிய பங்கில் ஒன்றாக உள்ளது.
அப்படி என்ன பங்கு அது? இந்த பங்கின் நிலை எப்படியிருக்கும்? எதிர்பார்ப்புகள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
ஜுன் ஜுன்வாலா வசம்
கடந்த டிசம்பர் காலாண்டு நிலவரப்படி, 5.22% பங்கினை இந்த ஆட்டோ பங்கினை வைத்துள்ளார் என பி எஸ் இ தரவு சுட்டிக் காட்டுகிறார். கடந்த டிசம்பர் 2020 காலாண்டுடன் ஒப்பிடும்போது அரை சதவீதமானது அதிகரித்துள்ளது. இது சுமார் 64,00,000 பங்குகளாகும்.
அது எஸ்கார்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் தான். இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 1883 ரூபாய் எண்ற லெவலில் காணப்பட்டது. இந்த நிறுவன பங்கின் விலையானது கடந்த 6 மாதங்களில் 56% அதிகரித்துள்ளது. இதே ஒரு வருடத்தில் 45% அதிகரித்துள்ளது.
குபேடா கார்ப்பரேஷன்
எஸ்கார்ட்ஸ் நிறுவனம் விவசாய இயந்திரங்கள் மற்றும் கட்டுமான உபகரணங்கள் உற்பத்தியாளராகும்.
கடந்த ஆண்டு டிசம்பர் 2020ல் முன்னுரிமை அடிப்படையில் 94 லட்சம் பங்குகளை, ஜப்பானின் குபோடா கார்ப்பரேஷனுக்கு ஒதுக்கீடு செய்தது. இதனால் எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தில் மிகப்பெரிய பங்குதாரராக உள்ளது.
ஜுன் ஜுன்வாலாவும் மிகப்பெரிய பங்குதாரர்
எஸ்கார்ட்ஸ் நிறுவனம் அதன் இயக்குனர் குழுமத்தில் 12 உறுப்பினர்காளை கொண்டுள்ளது.
இத்தகைய ஒரு நிறுவனத்தில் தான் ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவும் கணிசமான பங்கினை வைத்துள்ளார். இது தொடர்ந்து ஓராண்டுகளுக்கும் மேலாக ஹோல்டு செய்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பரிந்துரை
இதோபோல் இவரின் போர்ட்போலியோவில் உள்ள மற்றொரு பங்கான ஃபெடரல் வங்கியினை நிபுணர்கள் வாங்க பரிந்துரை செய்துள்ளனர்.
இதன் டெபாசிட் விகிதம், எல்சி ஆர் விகிதம் எப அனைத்தும் சாதமான வளர்ச்சியிலேயே உள்ளன. இதற்கிடையில் தான் இந்த பங்குகளை வாங்க நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதன் காசா விகிதம் டிசம்பர் காலாண்டில் 36.7% வளர்ச்சி கண்டுள்ளது.
இன்றைய பங்கு விலை
எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று சற்று அதிகரித்து 1883.30 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
இதே போல் ஃபெடரல் வங்கியின் பங்கு விலையானது மாற்றமின்றி 90.05 ரூபாயாக முடிவுற்றுள்ளது. இதன் இன்றைய உச்சம் 90.6.. இன்றைய ககுறைந்தபட்ச விலை 89 ரூபாயாகும்.


Click it and Unblock the Notifications