ஒரு ஆண்டில் ரூ.7 கோடி லாபத்தை அள்ளிய ராகேஷ் ஜூன் ஜூன்வாலா.. என்ன பங்கு தெரியுமா?

இந்தியாவின் வாரன் பஃபெட் என்றழைக்கப்படும் ராகேஷ் ஜூன் ஜூன்வாலா பற்றி நிச்சயம் தெரிந்திருக்கலாம். பங்கு சந்தையில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்து லாபம் கண்டு வரும் இவரின் பங்குகளை ஃபாலோ செய்யும் சில்லறை முதலீட்டாளர்கள் ஏராளம்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பில்கேர் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை, இந்த பங்கின் விலை நல்ல ஏற்றத்தினை கண்டுள்ளது.

ஜூன் ஜூன்வாலா மற்றும் ரேகா வசம் டிசம்பர் 2020 நிலவரப்படி, 19.97 லட்சம் பங்குகள் இருந்தது. இதன் மதிப்பு 8.70 கோடி ரூபாயாகும். இதில் செப்டம்பர் காலாண்டு நிலவரப்படி, ராகேஷ் ஜூன் ஜூன்வாலாவின் வசம் 17.35 லட்சம் பங்குகளும், 2.62 லட்சம் பங்குகளும் கைவசம் இருந்தன.

இன்றைய நிலவரம் என்ன?

இன்றைய நிலவரம் என்ன?

பிஎஸ்இ-ல் இன்று பில்கேர் பங்கின் விலை இன்று 80.75 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்றைய உச்ச விலை இன்றைய உச்சம் 84.70 ரூபாய் ஆகும். இதே குறைந்தபட்ச விலை 79.35 ருபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 119.25 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 41 ரூபாயாகும்.

ஓராண்டு நிலவரம் என்ன?

ஓராண்டு நிலவரம் என்ன?

கடந்த ஓராண்டில் இந்த பங்கின் விலையானது 88.45% ஏற்றம் கண்டுள்ளது. இதே இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 85.42% அதிகரித்துள்ளது. இந்த மைக்ரோ கேப் பங்கின் விலையானது, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 9.05% அதிகரித்துள்ளது. பில்கேர் பங்கின் விலையானது 5 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள் மற்றும் 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜீக்கும் கீழாக வர்த்தகமாகி வருகின்றது.

லாபம் அதிகரிப்பு

லாபம் அதிகரிப்பு

ஃபண்டமெண்டல் ரீதியாக இந்த நிறுவனத்தின் நிகரலாபம் இரண்டாவது காலாண்டில் 22.40 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 3.36 கோடி ரூபாயாக நஷ்டம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் நிகர விற்பனை 34.21% அதிகரித்து 203.53 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 151.65 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 செயல்பாட்டு லாபம்

செயல்பாட்டு லாபம்

இந்த நிறுவனத்தின் செயல்பாட்டின் மூலம் கிடைத்த வருவாய் விகிதமானது 49.72% அதிகரித்து 15.81 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 10.56 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே இந்த நிறுவனம் மருந்து பேக்கேஜிங் செய்யும் தீர்வுகளை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

எங்கெங்கு செயல்பாடு?

எங்கெங்கு செயல்பாடு?

இந்த நிறுவனம் பிளாஸ்டிக், பாலிமர், அலுமினியம் மற்றும் அலுமினிய பொருட்கள் என பலவற்றின் மூலம் தீர்வினை வழங்கி வருகின்றது. இதன் ஆலை இந்தியாவில் புனேவில் அமைந்துள்ளது. இது இந்தியா, சிங்கப்பூர், ஜெர்மனி மற்றும் அமெரிக்காவிலும் தனது செயல்பாட்டினை செய்து வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+