இந்தியாவின் வாரன் பஃபெட்டின் போர்ட்போலியோவில் புதியதாக ஒரு பங்கு தற்போது இணைந்துள்ளது. இதுவும் கவனிக்க வேண்டிய பங்குகளில் ஒன்றாக மாறியுள்ளது.
ஜூலை - செப்டம்பர் 2021 காலாண்டில் ராகேஷின் போர்ட்போலியோவில் மூன்று பங்குகள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று கனரா வங்கி.
தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், அப்பங்கின் விலையானது 2021ம் ஆண்டின் இறுதியில், புராபிட் புக்கிங் செய்யப்பட்டன.
கனரா வங்கி அதிகரிக்கலாம்
எனினும் இது இனி வரவிருக்கும் வாரங்களில் மீண்டும் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பேங்க் நிஃப்டி இன்டெக்ஸ் மேலாக அதிகரிக்கும் போது கனரா வங்கியின் பங்கு விலையும் மேற்கொண்டு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மீடியம் டெர்மில் இப்பங்கின் விலையானது 250 ரூபாய் வரையில் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
போர்ட்போலியோவில் இணையுங்கள்
ஆக வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி போர்ட்போலியோ முதலீடுகளில், இந்த பங்கினை இணைத்துக் கொள்ளலாம். இது குறித்து சாய்ஸ் புரோக்கிங் நிறுவனத்தின் சுமூத் பகாடியா இந்த பங்கின் விலையானது, 200 ரூபாய் என்ற லெவலில் உள்ளது. சார்ட் பேட்டர்னிலும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகின்றது.
இலக்கு என்ன?
கனரா வங்கியின் பங்கு விலையானது அதிகரிக்கலாம் என்ற நிலையில், ஒரு மாதத்தில் அதன் பங்கு விலையானது 225 ரூபாய் அல்லது 230 ரூபாயாக அதிகரிக்கலாம் என காமாடிட்டி நிபுணர்கள் கணித்துள்ளனர். இதன் ஸ்டாப் லாஸ் விலையானது 185 ரூபாய் என்ற லெவலில் வைத்துக் கொள்ளலாம்.
சாதகமான காரணிகள்
ஒரு வேளை உடைத்தால் 250 ரூபாயினை தொடலாம். கனரா வங்கியின் வளர்ச்சி விகிதமானது வலுவான வளர்ச்சி கண்டுள்ளது. இதன் கடன் வசதி 7 -8% அதிகரிக்கலாம். வாராக்கடன் விகிதமும் குறைந்துள்ளது. இப்பங்கின் விலையானது அதிகரிக்க இதுவும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு விலை
கனரா வங்கியானது 1.75% அதிகரித்து, என் எஸ் இ-யில் 203.45 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் உச்ச விலை 203.75 ரூபாயாகவும், இதன் குறைந்த விலையானது 198.60 ரூபாயாகவும் குறைந்துள்ளது.
இதே பி எஸ் இ-ல் 1.88% அதிகரித்து 203.65 ரூபாயாக வர்த்தகமாகி வரு கின்றது. இன்றைய உச்ச விலை 203.80 ரூபாயாகவும், இதே குறைந்தபட்ச விலை 198.60 ரூபாயாகவும், 52 வார உச்ச விலை 247.80 ரூபாயாகவும், 52 குறைந்தபட்ச விலையானது 123.85 ரூபாயாகவும் உள்ளது.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications