இந்தியாவின் வாரன் பஃபெட் என்று செல்லமாக முதலீட்டாளர்களால் அழைக்கப்படும் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா, பங்கு சந்தைகளில் முதலீடு செய்பவர்களில் முக்கியமானவர்.
இவர் ஒரு பங்கினை வாங்கினாலோ விற்றாலோ கூட அது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அளவுக்கு முதலீடு செய்யும் திறன் கொண்ட ஜுன்ஜுன்வாலா, ஒரு பங்கினில் முதலீடு செய்கிறார்கள் என்றால் அது நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய பங்குகளில் ஒன்றாக உள்ளது.
பங்கு சந்தையானது கடந்த சில வாரங்களாகவே மிகப்பெரிய அளவில் ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் நிலையில், பல்வேறு நல்ல நல்ல நிறுவனங்களின் பங்குகள் கூட பலத்த சரிவினைக் கண்டுள்ளன. இந்த சவாலான காலகட்டத்தில் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா போர்ட்போலியோவில் எந்த மாதிரியான தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளது என பார்க்கலாம்.
மெட்ரோ பிராண்ட்ஸ்
இதற்கிடையில் தான் பிரபல பங்கு சந்தை முதலீட்டாளரான ஜுன்ஜுன்வாலா பெரும் இழப்பினை சந்தித்துள்ளார். குறிப்பாக ஜுன்ஜுன்வாலா போர்ட்போலியோவில் உள்ள மெட்ரோ பிராண்ட்ஸ் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 562.65 ரூபாயில் இருந்து 523.60 ரூபாயாக .சரிவினைக் கண்டுள்ளது. இது 39.05% சரிவினைக் கண்டுள்ளது.
ரூ.540 கோடி இழப்பு
இதே ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் பங்கு விலையானது 701.55 ரூபாயில் இருந்து, 663 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இது 38.55% சரிவினைக் கண்டுள்ளது. இவ்விரு பங்குகளின் சரிவுகளுக்கு மத்தியில் ஜுன்ஜுன்வாலாவுக்கு கிட்டத்தட்ட 540 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எவ்வளவு பங்கு?
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மற்றும் அவரது மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா வசம், 10,07,53,935 பங்குகள் அல்லது 17.50% பங்குகள் உள்ளன.
மெட்ரோ பிராண்ட்ஸில் ரேகா ஜுன்ஜுன்வாலா வசம் 39,153,600 பங்குகள் அல்லது 14.40% பங்குகள் உள்ளது.
முதலீட்டில் துண்டு
ஸ்டார் ஹெல்த்-ல் உள்ள 10,07,53,935 பங்குகள் 38.55% சரிவினைக் கண்டுள்ளது. ஆக இந்த பங்கினில் மட்டும் 388 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதே மெட்ரோ பிராண்டில் 39,153,600 பங்குகளில் 152 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆக மொத்தம் 540 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications