பங்கு சந்தை என்றாலே பதறியடுத்து ஒடும் பலருக்கும் மத்தியில், அதற்கு மாறாக மிக இளம் வயதில் பங்குசந்தையில் முதலீட்டை பலமடங்கு பெருக்கி, வெற்றிகரமான முதலீட்டாளராக வலம் வந்தவர் தான் இந்த ராகேஷ் ஜூன் ஜூன்வாலா. இதனால் தானே என்னவோ? இவர் இந்தியாவின் வாரன் பஃபெட் என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.
இப்படி ஒரு முதலீட்டு ஜாம்பவான் ஒரு பங்கினை வாங்கினால், நமக்கும் லாபம் கிடைக்கும் என வாங்குபவர்கள் பலர் உண்டு.
அவரின் போர்ட்போலியோவை பின்னபற்றும் முதலீட்டாளர்களும் உண்டு. அதோடு இவர் ஒரு பங்கினை வாங்கினாலோ அல்லது விற்றாலோ அது சந்தையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தலாம் என்ற எண்ணம் நிலவி வருகின்றது.
கவனிக்க வேண்டிய ஃபோர்டிஸ் ஹெல்த்கேர்
குறிப்பாக சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் ராகேஷ் ஜூன் ஜூன்வாலாவின் போர்ட்போலியோ, கவனிக்க வேண்டிய பங்குகளாக இருந்து வருகின்றது. அந்த வகையில் தற்போது ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் கவனிக்க வேண்டிய பங்காக கூறுகின்றனர். இது டெக்னிக்கலாக சார்ட் பேட்டர்னில் ஏற்றம் காணும் விதமாக உள்ளது.
விலை அதிகரிக்கலாம்
இதன் விலையானது 300 - 302 என்ற பிரேக் அவுட்டை உடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் இந்த பங்கின் விலையானது ஒரு மாதத்தில் 20% ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போது பாசிட்டிவ் ஆன நிலையில் காணப்படும் நிலையில், 300 - 302 லெவலையும், இதனை உடைத்தால் அடுத்து குறுகிய காலத்தில் 340 ரூபாயினையும் எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஸ்டாப் லாஸ் ஆக 260 ரூபாயினை வைத்துக் கொள்ள நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
முக்கிய சப்போர்ட்
ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் பங்கு விலையானது ஒரு வாரத்தில் 11% அதிகரித்துள்ளது. இதனால் இந்த வாரத்தில் புராபிட் புக்கிங்கும் இருக்கலாம். எனினும் வலுவான சப்போர்ட் ஆக 250 - 260 ரூபாய் இருக்கலாம். அப்படி வரும் வாரத்தில் சரிவு ஏற்பட்டால், குறைந்த விலையில் வாங்க நல்ல வாய்ப்பாக அமையும் என ஷேர் இந்தியா அறிக்கைகள் கூறுகின்றன.
தற்போதைய நிலவரம் என்ன?
தற்போதைய நிலவரப்படி ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் பங்கு விலையானது தற்போது 280 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகிறது. நடப்பு ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் 303.80 ரூபாயினை தொட்டது.
இந்த நிறுவனத்தின் லாப விகிதம் அதிகரித்துள்ள நிலையில், இதுவும் சந்தைக்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்கனவே கையில் ஆர்டர்களை வைத்திருந்தால், அதனையும் அப்படியே வைத்திருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ராகேஷ் ஜூன் ஜூன்வாலா வசம் எவ்வளவு?
ராகேஷ் ஜூன் ஜூன்வாலா வசம் கடந்த செப்டம்பர் 2021 நிலவரப்படி, ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனம் 3,19,50,000 பங்குகளை வைத்துள்ளனர். இது மொத்த பங்கு மூலதனத்தில் 4.23% ஆகும்.
***மேற்கண்ட பங்குகள் மற்றும் இலக்குகள் அனைத்தும் தரகு நிறுவனங்கள் கணிப்புகளாகும். ஆக இவற்றில் முதலீடு செய்யும் முன்னர் அதனை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு, பின்னர் முதலீடு செய்யலாம்.


Click it and Unblock the Notifications