பிரபல பங்கு சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் போர்ட்போலியோவின் மதிப்பு, 35,000 கோடி ரூபாயினை தாண்டியுள்ளது.
இது குறித்த டிரென்ட்லைன் தரவின் படி, ஜுன் ஜுன்வாலாவின் போர்ட்போலியோவின் மதிப்பு செப்டம்பர் 30 நிலவரப்படி, 33,225 கோடி ரூபாயாக இருந்தது. இது ஜூன் காலாண்டில் 25,425 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் தற்போதைய கணக்கீட்டின் படி, 35,066 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் வாரன் பஃபெட்
இந்தியாவின் வாரன் பஃபெட் என்று பாசமாக அழைக்கப்பட்ட பிக் புல்லான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, ஆகஸ்ட் 14 அன்று 62 வயதில் மாரடைப்பு காரணமாக காலமானார்.
தற்போது அவரது மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா மற்றும் அவரது மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய பங்கு சந்தை முதலீட்டாளருமான ஜுன் ஜுன்வாலா போர்ட்போலியோவில், ரேகா ஜுன்ஜுன்வாலாவின் பங்குகளின் மதிப்பும் அடங்கும்.
டைட்டன் பங்கு
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா போர்ட்போலியோவில் டைட்டன் நிறுவனம் முக்கிய இடம் பிடித்த பங்குகளில் ஒன்று. இப்பங்கினில் 5.05%ல் இருந்து, 5.54% ஆக அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு 13,388 கோடி ரூபாயாக இருந்தது.
இதே ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைட் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஹோல்டு செய்துள்ள மதிப்பு, 7056.80 கோடி ரூபாயாகவும், செப்டம்பர் 30ன் படி ஜுன் ஜுன்வாலாவின் நிலவரப்படி 17.4% ஆகவும் இருந்தது.
மெட்ரோ பிராண்டுகள்
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா போர்ட்போலியோவில் உள்ள மூன்றாவது பெரிய பங்கு, டாடா மோட்டார்ஸ் ஆகும். இது தவிர கிரிசில் மற்றும் இந்தியன் ஹோட்டல்ஸ் உள்ளிட்ட சில பங்குகள் அடங்கும். இதில் ஜுன்ஜுன்வாலாவின் பங்கு 1000 கோடி ரூபாய்க்கு மேல் என்றும் கூறப்படுகிறது.
பல பங்குகள் பட்டியலில்
இந்திய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 30 நிறுவனங்களில் 1% மேலான பங்குகளை வைத்துள்ளது.
சிங்கர் இந்தியா நிறுவன பங்கினை செப்டம்பர் காலாண்டில் ஜுன் ஜுன்வாலா போர்ட்போலியோவில் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்தம் 4,250,000 பங்குகள் சேர்க்கப்பட்டுள்ளது. இன்று அதன் மதிப்பு 30 கோடி ரூபாய்க்கு மேல். டாடா கம்யூனிகேஷன்ஸ் மற்றும் போர்டிஸ் ஹெல்த்கேர் உள்ளிட்ட நிறுவனங்கள் செப்டம்பர் காலாண்டில் பங்குகளை அதிகரித்த நிறுவனங்களில் அடங்கும்.
பங்குகள் குறைப்பு
ட்ரெண்ட்லைன் தரவுகளின் படி, செப்டம்பர் காலாண்டில் ஜூபிலண்ட் இங்க்ரீவியா, ஃபெடரல் வங்கி, கனரா வங்கி, டிபி ரியாலிட்டி மற்றும் ராலிஸ் இந்தியா பங்குகளில், பங்குகளின் விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
ஆப்டெக், ஜூபிலண்ட் பார்மோவா, புரோசோன் இண்டு ப்ராபர்டீஸ், ராலிஸ் இந்தியா, டிஷ்மேன் கார்போஜன் உள்ளிட்ட பங்கு விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று தரவுகள் மூலம் அறிய முடிகிறது.
புராபிட் புக்கிங் பங்குகள்
டிபி ரியால்டி மற்றும் ஸ்டார் ஹெல்த் அலைட் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் புராபிட் புக்கிங் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களில் முறையே செப்டம்பர் 30 காலாண்டில் 50,00,000 மற்றும் 1,78,70,977 பங்குகளாக இருந்தது. இது தவிர மெட்ரோ நிறுவனத்தில் ஜுன் காலாண்டில் 14.43% அல்லது 3,91,53,600 பங்குகளாக இருந்த நிலையில், செப்டம்பர் காலாண்டில் 9.62% அல்லது 2,61,02,394 பங்குகளாக குறைக்கப்பட்டுள்ளது. 1.3 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மொத்த போர்ட்போலியோ மதிப்பு
ட்ரெண்டிலைன் தரவின் படி, ஜுன்ஜுன்வாலாவின் போர்ட்போலியோவின் மதிப்பு தற்போது 35,000 கோடி ரூபாயினை தாண்டியுள்ளது. கடந்த செப்டம்பர் காலாண்டில் ஜுன் ஜுன்வாலாவில் பட்டியலில் சிங்கர் இந்தியா பங்கானது சேர்க்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications