இந்தியாவின் வாரன் பபெட் என அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா கடந்த வாரம் டைட்டன் காலாண்டு முடிவுகளை வெளியிடும் போதும் ஒரே நாளில் பல நூறு கோடி ரூபாயைச் சம்பாதித்தது அனைத்து பங்கு முதலீட்டாளர்களுக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்த நிலையில் தற்போது புதிதாக முதலீடு செய்துள்ளார்..
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மற்றும் அவரது மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா இணைந்து 2019 டிசம்பர் காலாண்டுக்குப் பின்பு முதல் முறையாகச் செப்டம்பர் காலாண்டில் மீண்டும் டைட்டன் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.
டைட்டன் நிறுவன
டைட்டன் நிறுவனத்தில் ஆரம்பம் முதலே முதலீடு செய்து வரும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மற்றும் அவரது மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா செப்டம்பர் காலாண்டுக்கு முன்பு 4.81 சதவீத பங்குகளை வைத்திருந்த நிலையில், புதிதாகச் செய்யப்பட்ட முதலீட்டின் மூலம் டைட்டன் நிறுவனத்தில் இவர்களின் மொத்த பங்கு இருப்பு அளவீடு 4.87 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா
இதேபோல் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குப் பின்பு கட்டுமான துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், சந்தையில் எந்தப் பொருட்களுக்கு அதிக டிமாண்ட், எந்த நிறுவனம் அதிக வர்த்தகத்தைப் பெற உள்ளது என்பதைத் தொடர்ந்து கண்காணித்து வரும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஜூன் மாதம் கண்டுபிடித்த ஒரு நிறுவனம் தான் SAIL.
SAIL நிறுவனம்
இந்தியாவில் ஸ்டீல் தேவை அதிகமாக இருப்பதை உணர்ந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா SAIL - steel authority of india நிறுவனத்தில் ஜூன் மாதம் பெரும் தொகையை முதலீடு செய்து இந்நிறுவனத்தின் 1.76 சதவீதம் பங்குகளைக் கைப்பற்றினார்.
300 கோடி ரூபாய்
தற்போது கூடுதலாக முதலீடு செய்து மொத்தம் 1.76 சதவீத steel authority of india பங்குகளைக் கைப்பற்றியுள்ளார். இந்த 1.76 சதவீத பங்குகளின் இன்றைய மதிப்பு கிட்டதட்ட 300 கோடி ரூபாய். இன்றைய வர்த்தகத்தில் steel authority of india நிறுவனத்தின் பங்குகள் 0.59 சதவீதம் சரிந்து 118.75 ரூபாய் அளவீட்டைத் தொட்டு உள்ளது.
ஜுன்ஜுன்வாலா குடும்பம்
இதேபோல் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மற்றும் அவரது மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா செப்டம்பர் காலாண்டில் MCX மற்றும் லுப்பின் ஆகிய நிறுவனப் பங்குகளில் செய்த முதலீட்டை முழுமையாகத் திரும்பப்பெற்றுள்ளார். மேலும் இவ்விரு நிறுவனத்தில் இருந்து மொத்தமாக வெளியேறியுள்ளது ஜுன்ஜுன்வாலா குடும்பம்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications