நம் நாட்டின் பிராண்டட் ஸ்டீல் பொருட்கள் உற்பத்தியாளர்களில் ஒன்று ராமா ஸ்டீல் டியூப்ஸ். இந்நிறுவனம் ஸ்டீல் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் ஸ்டீல் பைப்ஸ், குழாய்கள் மற்றும் கால்வனைஸ் செய்யப்பட்ட இரும்பு குழாய்களை தயாரித்து விற்பனை செய்கிறது. உள்நாட்டு சந்தையில் வலுவான இருப்பை கொண்டுள்ள இந்நிறுவனம், 16 நாடுகளில் தனது வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது. செயில், கெயில்,ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பிஎஸ்என்எல், எல் அண்ட் டி,அதானி உள்பட பல முன்னணி நிறுவனங்கள் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பென்னி பங்கான ராமா ஸ்டீல் டியூப்ஸ் பங்கு குறுகிய காலத்தில் மல்டிபேக்கர் பங்காக உருவெடுத்துள்ளது. இந்த பங்கில் முதலீடு செய்தவர்கள் குறுகிய காலத்தில் அபரிதமான லாபத்தை அடைந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.4.52 என்ற விலையில் இருந்த இந்த பங்கு தற்போது ரூ.12.35 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 3 ஆண்டுகளில் இப்பங்கு முதலீட்டாளர்கள் பணத்தை 160 சதவீதம் அதிகரித்துள்ளது. 5 ஆண்டுகளில் இப்பங்கின் விலை 1,800 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு இப்பங்கின் விலை 65 காசுகளாக இருந்தது.

இந்த பங்கின் அபரிதமான வளர்ச்சிக்கு, அந்நிறுவனத்தின் வலுவான நிதி செயல்திறன், புதிய இடங்களில் தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்துவது, தனது தயாரிப்புகளை விரிவுப்படுத்தியது, உற்பத்தி ஆலைகளை வலுப்படுத்தியது மற்றும் கடனை குறைப்பதில் கவனம் செலுத்தியது போன்றவை உள்ளன.
மேலும், சந்தையில் ஸ்டீல் பொருட்களுக்கான தேவை அதிகரித்தது. இது போன்ற காரணங்களால் இந்நிறுவன பங்கு அதிக ஆதாயத்தை வழங்க வழிவகுத்தது. இந்நிறுவனம் தற்போது சூரிய மின்சக்தி சந்தையில் கவனம் செலுத்தி வருகிறது.
ராமா ஸ்டீல் டியூப்ஸ் நிறுவனம் தொடர்ந்து நல்ல லாபம் ஈட்டி வருகிறது. இந்நிறுவனம் கடந்த 2024 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.2.58 கோடியும், வருவாயாக ரூ.158.30 கோடியும் ஈட்டியிருந்தது. மேலும் கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.2.92 கோடியும், வருவாயாக ரூ.219.58 கோடியும் ஈட்டியுள்ளது.
ட்ரெண்ட்லைன் தரவுகளின்படி, நிறுவனத்தின் ரீடெயில் பங்குதாரர்களின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்துள்ளது. உதாரணமாக 2023 டிசம்பரில் இந்நிறுவனத்தின் ரீடெயில் பங்குதாரர்களின் எண்ணிக்கை 72,757ஆக இருந்தது. இது 2024 டிசம்பரில் 8,45,598ஆக இருந்தது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
Story written by: Subramanian
More From GoodReturns

போருக்கு நடுவில் குத்தாட்டம்! சென்செக்ஸ் 2350 புள்ளிகள் உயர உண்மை காரணம் என்ன? பங்குகளில் முதலீடு செய்யலாமா?

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்களுக்கு செபி தலைவர் கூறும் அட்வைஸ்

அந்தர் பல்டி அடித்த அதானி டோட்டல் கேஸ் பங்குகள்.. முதலீட்டாளர்கள் ஷாக்..!!

கதறி கதறி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போரின் கோரமுகம் இந்தியாவில் எதிரொலி..!!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!

Out Of Stock ஆன இண்டக்ஷன் ஸ்டவ்.. பங்குச்சந்தையில் கில்லி ஆக மாறிய 3 பங்குகள்.. ரெடியாகும் முதலீட்டாளர்கள்..!!

ரூ.7 லட்சம் கோடி மாயம்.. பங்குச்சந்தையில் என்ன தான் நடக்குது..?

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!



Click it and Unblock the Notifications