மும்பை பங்குச் சந்தையில் ஸ்மால்கேப் பிரிவில் உள்ள ராமா ஸ்டீல் ட்யூப்ஸ் (RSTL) பங்கு ஆனது 20% உயர்ந்து அப்பர் சர்க்யூட்டில் வர்த்தகமாகியது. இது பசுமை மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான ஓனிக்ஸ் ரெனுவெபில் (Onix Renewable) உடனான கூட்டணியை அறிவித்துள்ளதால் ஏற்றம் அடைந்துள்ளது.
ராமா ஸ்டீல்ஸ் பங்கு விலை உயர்வு இந்த கூட்டாண்மையில் எரிசக்தி துறையில் அறிமுகத்தை குறிக்கிறது. அதேபோல், நிறுவனம் அதன் திறன்களை விரிவுபடுத்தியுள்ளது. இது புதிய சூரிய சக்தி திட்டங்களை மேம்படுத்துவதற்கான அத்தியாவசிய கூறுகளான சிறப்பு ஸ்டீல் கட்டமைப்புகள் மற்றும் டிராக்கர் குழாய்களை வடிவமைத்துள்ளது.

இதற்கிடையில், ஸ்மால்கேப் பிரிவில் ராமா ஸ்டீல் டியூப்ஸ் நேற்று வியாழன் அன்று அதன் 20% உயர்வுடன் அப்பர் சர்க்யூட்டைத் தொட்டது. பசுமை மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்காக ஒனிக்ஸ் ரெனுவெபில் உடனான தனது மூலோபாய கூட்டணியை அறிவித்த பின்னர் BSE இல் ரூ 13.90 என்ற நாளின் அதிகபட்சத்தைத் தொட்டது.
இன்றைய வர்த்தகத்தில் மதியம் 2.30 மணியளவில் ராமா ஸ்டீல்ஸ் பங்கு விலை 17 சதவீதம் உயர்வுடன் 16.27 ரூபாயாக உள்ளது. கடந்த 5 நாளில் இந்நிறுவன பங்குகள் 10.49 ரூபாயில் இருந்து 16.39 ரூபாயாக உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு 55.10 சதவீத லாபத்தை கொடுத்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் இதுவரையில் 34.46 சதவீதம் உயர்ந்துள்ளது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.
ராமா ஸ்டீல் டியூப்ஸ் லிமிடெட் (RSTL)ஓனிக்ஸ் ரெனுவெபல் உடன் கூட்டணியை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், இந்த கூட்டணியின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி சிங்கிள் ஆக்சிஸ் டிராக்கர்களுடன் ஸ்டீல் கட்டமைப்புகளை வழங்குவதில் கவனம் செலுத்தும் என்றும், ஓனிக்ஸ் ரெனுவெபல் மேற்கொள்ளும் சோலார் திட்டங்களுக்கு எதிர்காலத்தில் டுயல் ஆக்சிஸ் டிராக்கர்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று நிறுவனம் பங்குச் சந்தைகக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் சிறப்பு ஸ்டீல் கட்டமைப்புகள் மற்றும் டிராக்கர் குழாய்களை உருவாக்கும் பட்சத்தில் இது கிரீன்ஃபீல்ட் சோலார் திட்டங்களுக்கு முதுகெலும்பாக செயல்படும் என்று கூறப்படுகிறது. இந்த சோலார் திட்டங்களின் நம்பகத்தன்மை மற்றும் ஆயுட்காலம், ஸ்டீல் கட்டமைப்புகளின் தரம் மற்றும் நீடித்த தன்மையை பெரிதும் சார்ந்துள்ளது. இது போன்ற திட்டங்களின் நீண்டகால வெற்றி மற்றும் செயல்திறனை உறுதி செய்வதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
ராமா ஸ்டீல் ட்யூப்ஸ் 1974 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது கடந்த 50 ஆண்டுகளாக ஸ்டீல் குழாய்கள் இந்தியாவின் முன்னோடி உற்பத்தியாளராக உள்ளது. இவற்றின் பல-தயாரிப்பு சலுகைகளில் ஒட்டுமொத்த வகைகளில் முன் கால்வனேற்றப்பட்ட குழாய்கள், கட்டமைப்பு குழாய்கள், MS கருப்பு மற்றும் கால்வனேற்றப்பட்ட குழாய்கள் மற்றும் வெற்றுப் பகுதிகள் ஆகியவை அடங்கும். இது நிறுவனத்தை இந்தியாவின் முன்னணி பிராண்டட் ஸ்டீல் தயாரிப்பு உற்பத்தியாளர்களில் ஒன்றாக விளங்குகிறது.
மறுபுறம், ஓனிக்ஸ் ரெனுவெபில்ஸ் இந்தியாவின் பல்வேறு துறைகளான புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஐபிபி, இபிசி, ஆற்றல் மாற்றம், உள்கட்டமைப்பு, காற்று, சூரிய ஒளி, சேமிப்பு, பயன்பாடு, கலப்பின பச்சை ஹைட்ரஜன், ஆர்&டி, மின் உற்பத்தி மற்றும் சூரிய ஒளி பேனல் உற்பத்திபோன்ற பல்வேறு துறைகளில் முன்னணியில் உள்ளது. ஓனிக்ஸ் ரெனுவெபில்ஸ் தற்போது 600 மெகாவாட் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. மற்றும் கூடுதலாக 2200 மெகாவாட் திறனுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications