நாட்டின் கோடீஸ்வரர்களின் ஒருவரான 86 வயதான டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா கடந்த 2016 இல் தரகு நிறுவனமான அப்ஸ்டாக்ஸில் 1.33% பங்குகளை வாங்கினார். இதற்கிடையில், சமீபத்தில், அந்த நிறுவனம் பைபேக் சலுகையை வழங்கியது. இதில் பலர் லாபமடைந்த நிலையில், ரத்தன் டாடாவும் லாபமடைந்துள்ளார்.
டைகர் குளோபல் ஆதரவு பெற்ற தள்ளுபடி தரகு தளமான அப்ஸ்டாக்ஸில், டாடா தனது முதலீட்டில் 23,000% வருமானம் ஈட்டுவதற்காக ஒரு சிறிய அளவிலான பங்குகளை விற்றுள்ளார். அதன்படி, அப்ஸ்டாக் ரத்தன் டாடா அப்ஸ்டாக்ஸில் 5% பங்குகளை விற்று, தனது முதலீட்டில் 10 மடங்கு லாபம் ஈட்டியுள்ளார்.

இதன்மூலம் அப்ஸ்டாக்கில் டாடாவின் பங்கு 2016 இல் முதலீடு செய்யப்பட்ட தொகையிலிருந்து சுமார் 23,000% வருவாயைப் பதிவு செய்துள்ளது. தற்போது தனது முதலீட்டில் 95% பங்குகளை வைத்திருக்கிறார். அப்ஸ்டாக் இன் மதிப்பீடு இப்போது 3.5 பில்லியன் டாலராக உள்ளது.
இதுகுறித்து அப்ஸ்டாக்ஸ் இணை நிறுவனர் கவிதா கூறுகையில், எங்கள் பார்வையில் டாடாவின் ஆரம்பகால நம்பிக்கை எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்தாகவும், நிறுவனத்தின் வெற்றிக்கு டாடா தனது பங்குகளில் பெரும்பகுதியை தொடர்ந்து வைத்திருப்பதாகவும், இது அப்ஸ்டாக்ஸில் தொடர்ந்து நம்பிக்கையை காட்டுவதாக கூறியுள்ளார்.
இந்த பைபேக் சலுகை பெற்ற சிலர் மட்டுமல்ல ஒவ்வொருவரும் தங்கள் செல்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பை பெற தகுதியானவர்கள் என்று நம்புவதாக கூறினார். எங்களின் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் வலுவான வருவாயை வழங்குவதே எங்கள் நோக்கம் எனவும், டாடாவின் முதலீட்டில் ஒரு பகுதியை இன்று எங்களால் திருப்பித் தர முடிகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் கூறினார்.
மேலும், ரத்தன் டாடாவின் ஆதரவு எங்களைத் தொடர்ந்து பயணிக்க தூண்டுகிறது என்றும், எங்கள் இலக்கில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் எனவே, அனைவருக்கும் அதிக செல்வத்தை அதிகரிக்க செய்வதே எங்கள் நோக்கம் என்றும் கூறினார்.
2023ம் நிதியாண்டில் அப்ஸ்டாக் முந்தைய ஆண்டில் 445 கோடி ரூபாய் இழப்புடன் ஒப்பிடுகையில், 25 கோடி ரூபாய் ஒருங்கிணைந்த நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. அதன் தரகு வருவாய் 44% அதிகரித்து ரூ. 1,000 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது. அதே சமயம் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.200 கோடி மதிப்பில் முதலிடம் பிடித்தது.


Click it and Unblock the Notifications