தொடர்ச்சியாக அப்பர் சர்கியூட்-ல் இருக்கும் மல்டிபேக்கர் பங்கு.. உங்க லிஸ்ட்ல இருக்கா?

ஸ்டீல் நிறுவனமான ரதி ஸ்டீர் மற்றும் பவர் நிறுவனத்தின் பங்கு தொடர்ந்து இரண்டு நாட்களாக அப்பர் சர்கியூட் நிலையை எட்டி வருகிறது. தங்கள் ஸ்டீல் உற்பத்தி முறையில் எரிபொருள் சிக்கனம் செய்யும் வகையில் இந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பே இதற்கு காரணம் ஆகும்.

மல்டிபேக்கர் பங்கான ரதி ஸ்டீர் மற்றும் பவரின் பங்கு மதிப்பு ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி அன்று பங்குச்சந்தையில் 75.52 ரூபாய் என்ற அளவில் அப்பர் சர்க்யூட் நிலையை எட்டியது. முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் இந்த நிறுவனத்தின் பங்கு சுமார் 5 சதவிகிதம் உயர்வு கண்டது. தொடர்ந்து ஆறு நாட்களாக சரிவடைந்து வந்த இந்த நிறுவனத்தின் பங்கு தொடர்ந்து இரண்டு நாட்களாக மீண்டும் ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.

தொடர்ச்சியாக அப்பர் சர்கியூட்-ல் இருக்கும் மல்டிபேக்கர் பங்கு.. உங்க லிஸ்ட்ல இருக்கா?

அண்மையில் ரதி ஸ்டீர் மற்றும் பவர் நிறுவனம் தங்களுடைய ஸ்டீல் உற்பத்தியில் எரிபொருள் பயன்பாட்டை மிச்சப்படுத்தும் நோக்கில் பல்வேறு மாற்றங்களை அறிவித்தது. இதன் மூலம் இந்த நிறுவனம் தங்களுடைய கார்பன் வெளியீட்டை குறைக்க இருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து நிறுவனத்தின் பங்குகள் உயர்வை கண்டன.

இவ்வாறு எரிபொருள் சிக்கனத்தில் ஈடுபடுவதால் நிறுவனத்தின் செலவு கணிசமான அளவு குறையும் என்றும் இதன் காரணமாக லாபம் அதிகரிக்கும் என்றும் ரதி ஸ்டீர் மற்றும் பவர் நிறுவனத்தின் புரமோட்டர் உதித் ரதி தெரிவித்துள்ளார்.

தங்களுடைய நிறுவனத்தில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பில்லட்டுகளை நேரடியாக சார்ஜிங் செய்யும் நடைமுறை கொண்டுவரப்படுவதாக கூறியுள்ளார். இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த நடைமுறையை அமல்படுத்தும் நிறுவனம் தங்களுடையது என தெரிவித்துள்ளார். ரதி ஸ்டீர் மற்றும் பவர் நிறுவனத்தின் பங்கு கடந்த ஐந்தாண்டு காலத்தில் சுமார் 2297 சதவிகிதம் லாபத்தை பெற்று தந்துள்ளது.

கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் 593 சதவவிகித லாபம் தந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. ரதி ஸ்டீர் மற்றும் பவர் நிறுவன பங்கின் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 10.89 ரூபாய் ஆகும், 52 வார கால அதிகபட்ச மதிப்பு 97 ரூபாய் ஆகும். இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 612 கோடி. கடனே இல்லாத நிறுவனமாக இது செயல்பட்டு வருகிறது.

இந்த பங்கின் பேஸ் வேல்யூ 10 ரூபாய் ,நிறுவனத்தை பொறுத்தவரை 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 119 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. இதில் 20 கோடி ரூபாய் லாபம் ஆகும். இந்த நிறுவன பங்குகளில் சில்லறை முதலீட்டாளர்கள் 47.84 சதவீத பங்குகளை வைத்துள்ளனர். 40% பங்குகளை புரமோட்டர்களும், வெளிநாட்டு நிறுவனங்கள் 8 . 95% பங்குகளையும் உள்நாட்டு நிறுவனங்கள் 2.08% பங்குகளையும் கொண்டு இருக்கின்றன.

Story Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+