கடந்த 23 மார்ச் 2020 முதல் சென்செக்ஸ், மெல்ல ஏற்றம் காணத் தொடங்கி இருக்கிறது.
ஒரு சின்ன ஏற்ற டிரெண்டே தொடங்கிவிட்டது எனலாம். அந்த ஏற்றம் இப்போது 31,100-க்கு மேல் வரை கொண்டு வந்து இருக்கிறது.
இன்று காலை ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸ் பேச இருக்கிறார் என்கிற செய்தி வெளியான உடன், சென்செக்ஸ் ஒரு நல்ல ஏற்றத்தைக் கண்டது. ஆனால் இப்போது தன் ஏற்றத்தை இழந்து கொண்டு இருக்கிறது சென்செக்ஸ்.
சென்செக்ஸ்
ஏப்ரல் 16, 2020, வியாழக்கிழமை, மாலை சென்செக்ஸ், 30,602 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 31,656 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. ஒரு மெல்லிய கேப் அப்பை அப்படியே பிடித்துக் கொண்டு, சென்செக்ஸ் இன்றைய அதிகபட்ச புள்ளியான 31,711 புள்ளிகளைத் தொட்டது. இது ஆர்பிஐ ஆளுநர் தன் பேச்சை நிறைவு செய்வதற்கு முன்.
பேச்சுக்குப் பின்
ஆர்பிஐ ஆளுநர் பேசி முடித்த பின், சென்செக்ஸ் குறைந்தபட்ச புள்ளியாக 30,960 புள்ளிகள் வரைத் தொட்டு இருக்கிறது. ஆக இன்றைய உச்ச புள்ளியான 31,711 புள்ளியில் இருந்து தற்போதைய 31,050 புள்ளிகளைக் கழித்தால் சுமார் 706 புள்ளிகள் சரிந்து இருக்கிறது.
ஆர்பிஐ அறிவிப்பு
மத்திய ரிசர்வ் வங்கி தன் ரிவர்ஸ் ரெப்போ ரேட்டை 0.25 % குறைத்து இருக்கிறது. இதனால் பொருளாதாரம் மற்றும் சந்தையில் கூடுதலாக பணம் புழங்கும். இந்த பணப் புழக்கத்தை பங்குச் சந்தைகள் பெரிதாக வரவேற்கவில்லை என்று தான் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.
இண்டெக்ஸ் பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 22 பங்குகள் ஏற்றத்திலும், 08 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,344 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 1,493 ஏற்றத்திலும், 713 பங்குகள் இறக்கத்திலும்,138 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
செக்டோரியல் இண்டெக்ஸ்
நிஃப்டி துறை சார் இடெக்ஸ்களில் FMCG மற்றும் பார்மா துறை தவிர மற்ற எல்லா துறை சார் இண்டெக்ஸ்களும் ஏற்றத்தில் தான் வர்த்தகமகிக் கொண்டு இருக்கின்றன. வங்கி, தனியார் வங்கி, ரியாலிட்டி போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications