நேற்று வியாழக்கிழமை அன்று இந்திய ரூபாயின் மதிப்பு 73.59-க்கு வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே நிலை பெற்று 73.60 முதல் 73.70க்குள்ளேயே வர்த்தகமாகி வந்தது.
ரூபாய் பாதிப்பு
பல பங்குச் சந்தை வல்லுநர்களும், அனலிஸ்டுகளும் ஆர்பிஐ தன் ரெப்போ ரேட்டை அதிகரிக்கவே செய்வார்கள் என ஆரூடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அனைவரின் எதிர்பார்ப்புக்கு முரணாக ஆர்பிஐ வட்டி விகித கூட்டத் தொடரில் வட்டி விகிதம் உயர்த்தப்பட வில்லை. இந்த செய்தி வெளியானதுமே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ருபாயின் மதிப்பு சரியத் தொடங்கி தன் வாழ்நாள் புதிய சரிவான 74.10-ல் வர்த்தகமாகி வருகிறது.
சந்தை எதிரொலி
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவில் வாழ்நாள் சாதனை படைத்ததை சந்தையும் இறக்கம் காட்டி கொண்டாடி வருகிறது. காலையில் இருந்து படிப்படியாக இறக்கம் கண்டு வந்த சென்செக்ஸ், ரூபாயின் புதிய உச்ச செய்தியை கேட்ட பின் ஒட்டு மொத்தமாக தன் இறக்கத்தைக் காட்டத் தொடங்கிவிட்டது. தற்போது சென்செக்ஸ் சுமாராக 600 புள்ளிகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது.
ஆறு பேரும் ஆதரவு
ஆர்பிஐ கூட்டத்தில் ஆறு பேர் கொண்ட குழு தான் வட்டி விகிதத்தை அதிகரிக்கலாமா குறைக்கலாமா என்கிற முடிவை எடுப்பார்கள். வட்டி விகித ஓட்டு எடுப்பில் குழுவில் இருந்த ஆறு பேருமே இந்த முறை வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டாம் என்று தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
காணாமல் போன கலால் வரி ரத்து
நேற்று வியாழக்கிழமை மத்திய அரசு ரத்து செய்த 1.5 ரூபாய் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியின் தாக்கத்தை மக்கள் அனுபவிப்பதற்கு முன்னேயே நேரடியாக இந்த ரூபாய் மதிப்பு சரிவு சாப்பிட்டு விட்டது. மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எந்த பயணும் இல்லாமலேயே போய்விட்டது என்று ஆர்பிஐ குழுவினர் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள்.
More From GoodReturns

Rupee Crash! பெட்ரோல் முதல் தங்கம் வரை விலை உயரும் அபாயம்? இந்தியா என்னவாகும்?

வரலாறு காணாத சரிவு! 93-ஐ கடந்த ரூபாய் - சாமானியர்களின் பட்ஜெட்டிற்கு விழுந்த பலத்த அடி!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications