நாடே உற்றுநோக்கும் கூட்டம்.. வட்டியை குறைக்குமா ரிசர்வ் வங்கி ? – பங்குச்சந்தையில் என்ன நடக்கும்?

நாடே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் மும்பையில் நடைபெற்று வருகிறது. ஜூன் 4ஆம் தேதி தொடங்கிய கூட்டம் நாளையுடன் முடிவடையும் நிலையில், கூட்டம் முடிவடைந்த பின்னர் வட்டி விகிதம் குறைப்பு தொடர்பான அறிவிப்புகள் வெளியாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

2025 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து பிப்ரவரி ,ஏப்ரல் என தொடர்ந்து இரண்டு முறை இந்திய ரிசர்வ் வங்கி தலா 25 புள்ளிகள் என மொத்தமாக 50 புள்ளிகள் அளவுக்கு ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. எனவே இந்த கூட்டத்திலும் வட்டி விகிதங்களை குறைப்பது தொடர்பான முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் அது தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

நாடே உற்றுநோக்கும் கூட்டம்.. வட்டியை குறைக்குமா ரிசர்வ் வங்கி ? – பங்குச்சந்தையில் என்ன நடக்கும்?

வட்டியை குறைக்குமா?: இந்த முறையும் 25 அடிப்படை புள்ளிகளை குறைத்து அறிவிப்பு வெளியிடும் என MP Financial Advisory Service நிறுவன தலைவர் மகேந்திரா பாட்டீல், Green Portfolio PMS தலைவர் திவான் சர்மா ஆகியோர் கணிப்பு வெளியிட்டுள்ளனர். தற்போதுள்ள பொருளாதார வளர்ச்சியை இதே அளவில் நீடிக்க வேண்டும், மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும், பணவீக்கத்தை குறைக்க வேண்டும் என்பதால் ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என கூறுகின்றனர்.

மூன்றாவது முறை வட்டி குறைப்பா?: ஒருவேளை ரிசர்வ் வங்கி அப்படி ஒரு அறிவிப்பினை வெளியிட்டால் இந்த ஆண்டில் மட்டும் தொடர்ந்து மூன்றாவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படுவதாக இருக்கும். இதற்கு முன்னர் நாட்டில் பொருளாதார வளர்ச்சியை நிலை நிறுத்துவதற்காக 2012, 2015 மற்றும் 2020 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் ரிசர்வ் வங்கி 50 அடிப்படை புள்ளிகள் வரை ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து இருக்கிறது. ஆனால் அமெரிக்க மத்திய வங்கி தன்னுடைய ரெப்போ வட்டி விகிதத்தை 4.25 லிருந்து 4.50 சதவீதம் என ஒரே அளவில் வைத்திருக்கிறது.

பங்குச்சந்தையில் என்ன நடக்கும்: இதனிடையே நாளைய தினம் ரிசர்வ் வங்கி நிதி கொள்கை கூட்டம் முடிந்த பிறகு வட்டி விகிதம் தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என்பதால் பங்குச்சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவுவதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றன.ர் Stoxkart நிறுவனத்தின் இயக்குனரான பிரனாய் அகர்வால் ஒருவேளை ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தால் பங்குச்சந்தையில் நாம் ஏற்றத்தை காண முடியும் என கூறுகிறார். வங்கி, ரியல் எஸ்டேட் மற்றும் வாகன துறை சம்பந்தப்பட்ட பங்குகள் மீது நாளைய தினம் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவிக்கிறார்.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்: இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கும் போது பலரும் வங்கிகளில் கடன் வாங்குவதற்கு முன் வருவார்கள் என்றும் அது கார்ப்பரேட் முதலீடுகளை ஊக்குவிக்கும் என்றும் அவர் தெரிவிக்கிறார். நாளைய தினம் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவிப்பின் அடிப்படையில் பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம் இருக்கும் என தெரிவிக்கிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+