மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட தனியார் கடன் வழங்குநரான ஆர்.பி.எல் வங்கி லிமிடெட் (RBL Bank), துபாயை தளமாகக் கொண்ட எமிரேட்ஸ் என்.பி.டி (Emirates NBD) வங்கி தங்கள் நிறுவனத்தில் சிறிய அளவிலான பங்குகளை வாங்க விரும்புவதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளது. ஜூலை 2, புதன்கிழமை சிஎன்பிசி-டிவி 18 வெளியான தகவலின்படி, வங்கி விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது, வெளியான செய்திகள் அனைத்தும் தவறானது மற்றும் ஊகமானது இந்த கட்டுரையின் உள்ளடக்கங்களை நாங்கள் மறுக்கிறோம் என்று கூறியுள்ளது.
பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கமும் அசுர வளர்ச்சியும்: வங்கி மறுப்பு தெரிவித்த பிறகு, RBL வங்கியின் பங்குகள் ஆரம்பத்தில் எடுத்த சில லாபங்களைக் கைவிட்டு சரிய தொடங்கியது. ஆனாலும் நேற்றைய வர்த்தகம் முடிவு நேரத்தில் மீண்டும் லாபத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. புதன்கிழமை இன்று தொடர்ந்து ஐந்தாவது நாளாகப் பங்கு விலை உயர்ந்துள்ளதுடன், கடந்த எட்டு வர்த்தக அமர்வுகளில் ஏழு முறை விலை உயர்ந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் இதுவரை இந்தப் பங்கு 65% உயர்ந்து, முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முன்னதாக, எகனாமிக் டைம்ஸில் வெளியான ஒரு அறிக்கையின்படி, எமிரேட்ஸ் என்.பி.டி இந்தியாவில் வங்கித் துறையில் நுழையும் நோக்கில் RBL வங்கியில் சிறிய பங்குகளை வாங்குவதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தது. ஐடிபிஐ வங்கியிலும் பங்குகளை வாங்க என்.பி.டி ஆர்வம் காட்டியதாக முன்னதாக வந்த செய்திகள் தெரிவித்தன. இந்தியாவின் வளர்ந்து வரும் நிதித் துறையில் என்பிடி ஆர்வமாக உள்ளது என்றும், நடுத்தர அளவிலான தனியார் வங்கிகளில் அதற்கான சாத்தியங்களை காண்கிறது என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது.
வெளிநாட்டு உரிமையின் ஒழுங்குமுறைகள்: இந்திய வங்கிகளில் வெளிநாட்டு உரிமை கடுமையாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளிநாட்டு நிறுவனங்கள் ஒரு இந்திய வங்கியில் அதிகபட்சமாக 15% பங்குகளை வைத்திருக்க மட்டுமே அனுமதிக்கிறது. விதிவிலக்குகள் மிக அரிதானவை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் மட்டுமே வழங்கப்படுகின்றன. உதாரணமாக, கனடாவின் ஃபேர்ஃபாக்ஸ் ஃபைனான்சியல் (Fairfax Financial) CSB வங்கியில் அதிக பங்குகளை வைத்திருக்க அனுமதிக்கப்பட்டது.
அதேபோல், சிங்கப்பூரின் DBS வங்கி ஒரு சவாலான நிலையில் இருந்த லட்சுமி விலாஸ் வங்கியுடன் இணைக்க அனுமதிக்கப்பட்டது. சமீபத்தில், ஜப்பானின் SMBC நிறுவனம் Yes Bank-இல் 20% பங்குகளை வாங்குவதற்கு RBI-யின் ஒப்புதலை நாடியுள்ளது. Yes Bank விவகாரம், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் (SBI) திட்டமிட்ட வெளியேற்றம் தொடர்பான ஒரு சிறப்பு வழக்கு. எனினும், வங்கி உரிமை விதிமுறைகளை மறுபரிசீலனை செய்வதாக RBI ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா முன்பு குறிப்பிட்டிருந்தார்.
நேர்மறையான ஊக்கியாக Citi-ன் அறிக்கை: இந்த வார தொடக்கத்தில், RBL வங்கிக்குத் தரகு நிறுவனமான Citi-யிடமிருந்து 90 நாள் நேர்மறையான வினையூக்கி கண்காணிப்பு (Positive Catalyst Watch) கிடைத்தது. கடன் செலவை இயல்பாக்குவதன் மூலம் RBL வங்கியின் சொத்துக்கள் மீதான வருவாய் (RoA - Return on Assets) பாதை 45-50 அடிப்படைப் புள்ளிகள் மேம்படும் என்று Citi குறிப்பிட்டுள்ளது. Citi RBL வங்கியின் விலை இலக்கை ரூ.230-ல் இருந்து ரூ.285 ஆக உயர்த்தியது. RBL வங்கியின் பங்குகள் தற்போது ரூ.260 என்ற அளவில் வர்த்தகமாகி வருகின்றன. இந்த நேர்மறையான அறிக்கையும், வலுவான காலாண்டு முடிவுகளுக்கான எதிர்பார்ப்புகளும் பங்குகளின் சமீபத்திய வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.
இதற்கிடையில், இன்றைய வர்த்தகத்தில் மதியம் 12.06 மணி நிலவரப்படி, ஆர்பிஎல் வங்கி பங்குகள் 0.22% சரிவில் பங்குகள் ஒவ்வொன்றும் ரூ.259.45 ஆக விற்பனையாகி வருகிறது.
More From GoodReturns

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!



Click it and Unblock the Notifications