ஆர்டிபி இன்ப்ராஸ்ட்ரக்சர் அண்ட் பவர் லிமிடெட் நிறுவனம் ரியல் எஸ்டேட் மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி துறையில் ஈடுபட்டு வரும் ஒரு முக்கிய நிறுவனமாகும். இந்நிறுவனம் 1981 முதல் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது.
மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட நாட்டின் பெரு நகரங்களில் குடியிருப்பு, ஷாப்பிங் மால்கள், அலுவலக இடங்கள் உள்பட பல்வேறு விதமான கட்டுமான திட்டங்களை சிறப்பாக செய்து வருகிறது. மேலும் சூரிய சக்தி மின்திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது.

ஆர்டிபி நிறுவனத்தின் (RDB Infrastructure and Power Limited) நிதி நிலை முடிவுகள் திருப்திகரமாக உள்ளது. இந்நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருவது, வர்த்தக ஒப்பந்தங்களை பெற்று வருவது போன்றவை இந்நிறுவனத்தின் சாதகமான அம்சமாகும்.
இந்நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டில் வருவாயாக ரூ.30.70 கோடியும், நிகர லாபமாக ரூ.95 லட்சமும் ஈட்டியது. மேலும் கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.32.49 கோடியாகவும், நிகர லாபம் ரூ.1.70 கோடியாகவும் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் இந்நிறுவனம் மொத்தம் ரூ.8 கோடி மதிப்பிலான 2 வர்த்தகங்களை டிவிசி நிறுவனத்திடம் இருந்து பெற்றது. மேலும், இந்நிறுவனம் அண்மையில் தனது பங்குகளை 10:1 என்ற விகிதத்தில் பங்கு பிரிப்பு செய்ய உள்ளதாக அறிவித்தது.
அதாவது தற்போதுள்ள ஒவ்வொரு ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒவ்வொரு பங்கும் ரூ.1 மதிப்புள்ள 10 பங்குகளாக பிரிக்கப்படும். பணப்புழக்கத்தை அதிகரிப்பது, பெரிய அளவில் முதலீட்டாளர்களை ஈர்ப்பது ஆகியவற்றை இலக்காக கொண்டு இந்த பங்கு பிரிப்பு நடவடிக்கையை இந்நிறுவனம் கையில் எடுத்துள்ளது.
புதிய வர்த்தக ஒப்பந்தம் பெற்றது, பங்கு பிரிப்பு அறிவிப்பு போன்றவற்றால் மும்பை பங்குச் சந்தையில் நேற்று இந்நிறுவன பங்கின் விலை ஏற்றம் கண்டது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை குறைந்தபட்சமாக ரூ.490வரை சென்றது.
இருப்பினும் பின்பு அதில் இருந்து 9.2 சதவீதம் உயர்ந்து ரூ.534.90ஐ எட்டியது. வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கின் விலை ரூ.528.40ல் நிலை கொண்டது. இன்று மும்பை பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 3.14 சதவீதம் உயர்ந்து ரூ.545ல் முடிவுற்றது.
ஆர்டிபி ரியாலிட்டி அண்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவன பங்கு கடந்த ஓராண்டில் முதலீட்டாளர்களுக்கு 555 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது. அதேவேளையில் , 5 ஆண்டுகளில் இப்பங்கின் விலை 3,140 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் புரோமோட்டர்ஸ் வசம் நிறுவனத்தின் 70.42 சதவீத பங்குகள் உள்ளன. அதேசமயம் பொதுமக்கள் வசம் 29.58 சதவீத பங்குகள் உள்ளன.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
Story written by: Subramanian
More From GoodReturns

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஈரான் தாக்குதல்: மொத்தமாக முடங்கிய UAE.. பங்குச் சந்தைகள், IT நிறுவனங்கள், பள்ளிகள் மூடல்..!

ஓரே நாளில் 6.5 லட்சம் கோடி இழப்பு.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!



Click it and Unblock the Notifications