ஆர்டிபி இன்ப்ராஸ்ட்ரக்சர் அண்ட் பவர் லிமிடெட் நிறுவனம் ரியல் எஸ்டேட் கட்டுமானம் மற்றும் மேம்பாட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. தற்போது டெல்லி, மும்பை, ஹைதராபாத், ஜெய்ப்பூர்,சூரத்,சென்னை போன்ற பல வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் இந்நிறுவனம் வலுவான இருப்பை கொண்டுள்ளது. மேலும், ஆர்டிபி இன்ப்ராஸ்ட்ரக்சர் அண்ட் பவர் லிமிடெட் நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது.
இந்நிறுவனம் கடந்த 2023-24ம் நிதியாண்டில் வருவாயாக ரூ.83.31 கோடியும், நிகர லாபமாக ரூ.3.86 கோடியும் ஈட்டியுள்ளது. மேலும் 2023 ஜூன் காலாண்டில் வருவாயாக ரூ.30.70 கோடியும், நிகர லாபமாக ரூ.95 லட்சமும் ஈட்டியிருந்தது. கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.32.49 கோடியாகவும், நிகர லாபம் ரூ.1.70 கோடியாகவும் அதிகரித்துள்ளது. இது இந்நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக உள்ளதை வெளிப்படுத்துகிறது.

இந்நிறுவனம் தொடர்ந்து லாபம் சம்பாதிப்பது போல். இந்நிறுவன பங்குகளும் முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயம் கொடுத்து வருகிறது. கடந்த ஓராண்டில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 295.28 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. அதேசமயம் 5 ஆண்டுகளில் இப்பங்கின் விலை 3000 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. நீண்ட கால அடிப்படையில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை வழங்கியுள்ளதால், பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களால் கவனிக்கப்படும் பங்காக மாறியுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே ஆர்டிபி இன்ப்ராஸ்ட்ரக்சர் அண்ட் பவர் லிமிடெட் நிறுவன பங்கின் விலை ரூ.553ஆக இருந்தது. 2024 மார்ச் 28ம் தேதி இப்பங்கின் விலை 52 வார குறைந்தபட்சமான ரூ.115.88க்கு சரிந்தது. ஆனால் அதன் பிறகு இப்பங்கின் தொடர்ந்து ஏற்றம் கண்டது. கடந்த டிசம்பர் 10ம் தேதியன்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.612.65ஐ எட்டியது. தற்போது இப்பங்கின் விலை அதன் உச்ச விலையிலிருந்து சுமார் 10 சதவீதம் குறைவாக உள்ளது.
ஆர்டிபி இன்ப்ராஸ்ட்ரக்சர் அண்ட் பவர் லிமிடெட் நிறுவனம் அண்மையில் பங்குகளை பங்கு பிரிப்பு செய்ய உள்ளதாக அறிவித்து இருந்தது. அதாவது அந்நிறுவனத்தின் ஒவ்வொரு ரூ.10 முகமதிப்புள்ள ஒவ்வொரு முழுமையாக செலுத்தப்பட்ட ஈக்விட்டி பங்கை, ரூ.1 முகமதிப்புள்ள முழுமையாக செலுத்தப்பட்ட ஈக்விட்டி பங்குகளாக பிரிக்கப்பட உள்ளது. தற்போது இந்நிறுவனம் பங்குச் சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில், பங்கு பிரிப்புக்கான அதன் உறுப்பினர்களின் தகுதியை உறுதி செய்வதற்கான பதிவு தேதியாக 2025 பிப்ரவரி 28ம் தேதியை நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications