இந்த பங்கினை மட்டும் வாங்கியிருந்த உங்க லெவலே வேற.. இனி ஒரு வாய்ப்பு கிடைக்குமா..!

பொதுவாக பங்கு சந்தைகளில் தான் இதுபோன்ற அதிசயங்கள் எப்போதாவது நடக்கும். வெறும் 10,000 ரூபாய் முதலீட்டின் மூலம் உங்களால் கோடீஸ்வரர் ஆகிவிட முடியுமா? ஆனால் அது பங்கு சந்தையில் சாத்தியம் என்கிறது இந்த பதிவு.

அப்படி ஒரு பொன்னான வாய்ப்பினை கொடுத்தது ஈச்சர் மோட்டார் நிறுவனம் தான். பொதுவாக பங்கு சந்தைகளில் நீண்டகால முதலீடுகள் என்பது நல்ல லாபம் கொடுக்கும் என நிபுணர்கள் கூறுவதை நாம் நிறைய படித்திருப்போம். கேட்டிருப்போம்.

ஆனால் அது உண்மை தான் என்பதற்கு சாட்சியம் தான் ஈச்சர் பங்கு. 20 வருடங்களுக்கு முன்பு ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கில், வெறும் 10,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்றைய மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஈச்சரின் பங்கு பயணம்

ஈச்சரின் பங்கு பயணம்

கடந்த இரண்டு தசாப்தங்களில் இந்த பங்கினில் முதலீடு செய்தவர்கள் இன்று கோடீஸ்வரர்கள் தான். ஏனெனில் இந்த பங்கின் விலையானது 2.43 ரூபாயில் இருந்து 2,712 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது சுமார் 1 கோடி ரூபாய்க்கும் மேலாக முதலீடு அதிகரித்திருக்கும். இது கடந்த ஆறு மாதங்களில் 2,447.25 ரூபாயில் இருந்து, 2,712 ரூபாயாக அதிகரித்துள்ளது.

கடந்த ஓராண்டு நிலவரம்

கடந்த ஓராண்டு நிலவரம்

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் இந்த பங்கில் 11% லாபம் கிடைத்துள்ளது எனலாம். இதே கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்த பங்கின் விலையானது 2,192.85 ரூபாயில் இருந்து, 2,712 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது சுமார் 115% வருமானத்தினையும் கொடுத்துள்ளது.

10 ஆண்டுகால வரலாறு

10 ஆண்டுகால வரலாறு

இதே கடந்த ஏப்ரல் 2020முதல் இப்பங்கின் விலையானது ஒரு பங்கிற்கு 1,268 ரூபாய் முதல் 2,712 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்த 10 ஆண்டுகளில் இந்த பங்கின் விலையானது 174 ரூபாயில் இருந்து, 2,712 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் 15.60 மடங்கு அதிகரித்துள்ளது.

20 ஆண்டுகளில் என்ன நிலவரம்

20 ஆண்டுகளில் என்ன நிலவரம்

இதே 20 ஆண்டுகளில் இந்த பங்கின் விலையானது 2.43 ரூபாயில் இருந்து( நவம்பர் 15, 2001, NSE Closing price) 2712 ரூபாயாக ( நவம்பர் 8, 2021, NSE closing price) அதிகரித்துள்ளது. இது முதலீட்டாளர்களின் முதலீட்டினை கோடி ரூபாயாக மாற்றியுள்ளது. இது போன்று மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா? என்பது தெரியவில்லை. ஆனால் பங்கு சந்தை முதலீட்டில் பொறுமையுடன் இருப்பது நல்ல லாபம் கொடுக்கலாம் என்பது நிரூபனமாகிறது.

முதலீடு – லாபம்

முதலீடு – லாபம்

ஈச்சர் மோட்டார் நிறுவனத்தின் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இந்த பங்கில் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 11,100 ரூபாயாகும்.
ஒரு வருடத்திற்கு முன்பு இதே 10,000 ரூபாயினை செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு 12,400 ரூபாயாகும்.
இதே ஏப்ரல் 2020 ஆரம்பத்தில் 10,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 21,500 ரூபாயாகும்.
10 ஆண்டுகளுக்கு முன்பு 10,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு 1.56 லட்சம் ரூபாயாகும்.
இதே 20 ஆண்டுகளுக்கு முன்பு 10,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 1 கோடி ரூபாய்க்கு மேல்.

இன்னும் அதிகரிக்குமா?

இன்னும் அதிகரிக்குமா?

இது குறித்து தரகு நிறுவனங்களின் கணிப்பின் படி, ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முக்கிய லெவல் 2,712 ரூபாயாகும். இதனை உடைத்து மேற்கோண்டு அதிகரித்தால் இது 2,900 ரூபாய் மற்றும் 3,000 ரூபாயினை தொடலாம் என கணித்துள்ளதுள்ளனர். எனினும் ஸ்டாப் லாஸ் 2,600 ரூபாயினை வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் லைவ் மிண்ட் செய்திகள் வெளியிட்டுள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+