2026ம் ஆண்டின் தொடக்கமே அமர்க்களமாக இருக்கப்போகிறது. பங்குச் சந்தையானது எற்ற இறக்கங்கங்களைச் சந்தித்து வந்தாலும், புத்திசாலித்தனமான முதலீட்டாளர்களுக்கு இது சரியான நேரம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தரகு நிறுவனமான ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் ஜனவரி மாதத்தில் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை வாரி வழங்கக்கூடிய 15 பங்குகளை பட்டியலிட்டுள்ளது. இதில் சில பங்குகள் தற்போதைய விலையில் இருந்து 54% வரையில் உயரும் என கணித்துள்ளது. இதில் ஐடி துறை, ஆட்டோமொபைல் துறை என பல முக்கிய துறை சார்ந்த பங்குகள் அடங்கும். தரகு நிறுவனம் தேர்வு செய்த 15 பங்குகள் என்னென்ன? அவற்றின் இலக்கு விலை என்ன. உங்கள் போர்ட்போலியோவில் இருக்க வேண்டிய அந்த பங்குகள் பற்றி பார்க்கலாம்.

ஜனவரியில் வாங்க வேண்டிய பங்குகள்?
பஜாஜ் பைனான்ஸ்
பஜாஜ் பைனான்ஸ் பங்கை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ள தரகு நிறுவனம் இலக்கு விலையை 1200 ரூபாயாக கொடுத்துள்ளது. அதன் மார்ஜின் வளர்ச்சியானது மேம்படலாம் என எதிர்பார்க்கும் தரகு நிறுவனம், அதன் போர்ட்போலியோவில் உள்ள பெரும்பான்மையான நிறுவனங்கள் சிறப்பான வளார்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. எம்.எஸ்.எம்.இ பிரிவில் குறுகிய காலத்தில் சற்று அழுத்தம் இருந்தாலும், நீண்ட கால அடிப்படையில் வளர்ச்சி இருக்கலாம் என எதிர்பார்க்கிறது.
எஸ்பிஐ
எஸ்பிஐ பங்கை வாங்கலாம் என கூறும் தரகு நிறுவனம், இலக்கு விலையை 1,135 ரூபாயாகவும் கொடுத்துள்ளது. தொடர்ந்து வளர்ச்சி பாதையில் உள்ள பொதுத்துறை வங்கியானது, லோன் டூ டெபாசிட் ரேசியோவும் சாதகமான சூழலில் உள்ளதாக தெரிவித்துள்ளது. இது வங்கியின் கடன் வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும் டெபாசிட்களுக்கான வட்டி குறைப்பு நிகர வட்டி மார்ஜினையும் மேம்படுத்தும் என கூறியுள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
ஹெச்.டி.எஃப்.சி வங்கி பங்கை வாங்கலாம் என்றும், இலக்கு விலையை 1,170 ரூபாயாகவும் கொடுத்துள்ளது. தொடர்ச்சியாக சிறப்பான வளர்ச்சியை கண்டு வரும் இவ்வங்கியானது, அனைத்து பிரிவிலும் இணைப்புக்கு முன்னதாக இருந்த வளர்ச்சி விகிதத்தை எட்டி பிடித்துள்ளது. வலுவான லோன் டூ டெபாசிட் ரேசியோவும் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கலாம்.
பார்தி ஏர்டெல்
பார்தி ஏர்டெல் நிறுவனமானது அதன் முக்கிய பிரிவுகளில் வலுவான வளர்ச்சியை கண்டு வருகிறது. இதனிடையே அதன் வருவாய் மற்றும் லாபம் வளர்ச்சியாமது தொடர்ந்து அதிகரிக்கலாம் என அதன் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. தொடர்ந்து கிராமப்புறங்களில் விரிவாக்கத்தை செய்து வரும் ஏர்டெல், நெட்வொர்க் விரிவாக்கத்திற்கு தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. அதன் மூலம் 4ஜி மற்றும் 5ஜி கவரேஜையும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் தான் இப்பங்கை வாங்கலாம் எனவும், இலக்கு விலையை 2,530 ரூபாயாகவும் கொடுத்துள்ளது.
அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்
அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தை பொறுத்த வரையில் அதிகரித்து வரும் போட்டிகளின் மத்தியில், தொடர்ந்து நிறுவனம் வளர்ச்சிக்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து ஸ்டோர் விரிவாக்கம் மற்றும் அதன் மூலம் செயல்பாடுகளையும் மேம்படுத்தி வருகிறது. இதற்கிடையில் தான் தரகு நிறுவனமானது இப்பங்கை வாங்கலாம் என்றும், இலக்கு விலையை 4,960 ரூபாயாகவும் உயர்த்தியுள்ளது.
மேக்ஸ் ஹெல்த்ஹேர் இன்ஸ்டிடியூட்
மேக்ஸ் ஹெல்த்ஹேர் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் ஆவரேஜ் ரெவன்யூ பெர் ஆக்பைட் பெட் விகிதமானது 3 - 7% வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கும் நிறுவனம், சிக்கலான அறுவை சிகிச்சை மற்றும் மேம்பட்ட மருத்துவ சேவைகளை அதிகரிப்பதன் மூலம் இது சாத்தியம் என தெரிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து எப்போதும் 80% படுக்கைகள் பயன்பாட்டில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கிறது. இதனிடையே தான் இப்பங்கை தரகு நிறுவனமானது இப்பங்கை வாங்கலாம் எனவும், இலக்கு விலையை 1,400 ரூபாயாகவும் கொடுத்துள்ளது.
பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ்
பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் பங்கை வாங்கலாம் என்றும், இலக்கு விலையை 2,000 ரூபாயாகவும் தரகு நிறுவனம் கணித்துள்ளது. மும்பை மற்றும் என்சிஆர் சந்தைகளில் அதன் தீவிரமான விரிவாக்கம், அதன் நீண்ட கால வளர்ச்சியை ஊகுவிக்கலாம்.
ஏபிஎல் அப்பல்லோ ட்யூப்ஸ்
ஏபிஎல் அப்பல்லோ ட்யூப்ஸ் பங்கை பரிந்துரை செய்துள்ள தரகு நிறுவனம், இலக்கு விலையை 2,100 ரூபாயாகவும் கொடுத்துள்ளது. உள்கட்டமைப்பு துறையில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் அரசின் நடவடிக்கைகளால், இந்த நிறுவனமானது பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதன் விற்பனை வளர்ச்சியானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கிறது.
மகாநகர் கேஸ்
மகாநகர் கேஸ் பங்கையும் வாங்கலாம் என கூறும் தரகு நிறுவனம், இலக்கு விலையை 1540 ரூபாயாகவும் கொடுத்துள்ளது. மகாநகர் நிறுவனம் அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது முதலீட்டாளர்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான மதிப்பீட்டில் காணப்படுகிறது. மேலும் நிறுவனத்தின் லாப வரம்பானது தொடர்ந்து வலுவான பராமரிக்கும் என எதிர்பார்க்கும் தரகு நிறுவனம், முக்கிய பகுதிகளில் சிஎன்ஜி மற்றும் பி என் ஜி பயன்பாடு அதிகரிப்பதால் நிறுவனம் பயனடையும் என தெரிவித்துள்ளது.
உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ்
உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் பங்கை பரிந்துரை செய்துள்ள தரகு நிறுவனம், இலக்கு விலையை 65 ரூபாயாகவும் கொடுத்துள்ளது. வலுவான கடன் வளர்ச்சியின் மத்தியில், மைக்ரோ பைனான்ஸிங் மற்றும் ஹவுசிங் பைனான்ஸ் பிரிவில் ஏதுவான வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கிறது. இந்த நிறுவனத்தின் சொத்தின் தரம் நிர்வகிக்க கூடியது தான். அதன் சொத்தின் மீதான வருமானமும் சிறப்பாக இருக்கும் என தரகு நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.
மற்ற பங்குகள் என்ன?
சேலட் ஹோட்டல்ஸ் பங்கை வாங்கலாம் என கூறும் தரகு நிறுவனம், இலக்கு விலையை 1,120 ரூபாயாக கொடுத்துள்ளது.
ஐனாக்ஸ் விண்ட் பங்கை வாங்கலாம் என கணித்துள்ள தரகு நிறுவனம், இலக்கு விலையை 190 ரூபாயாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.
சான்செரா இன்ஜினியரிங் பங்கின் இலக்கு விலையை 1,950 ரூபாயாகவும், இப்பங்கை வாங்கலாம் எனவும் ரேட்டிங் கொடுத்துள்ளது,
கல்பதரு ப்ராஜெக்ட்ஸ் இண்டர்நேஷனல் பங்கை வாங்கலாம் என்றும், இலக்கு விலையை 1475 ரூபாய் என்றும் கூறியுள்ளது.
கிர்லோஸ்கர் பிரதர்ஸ் பங்கை வாங்கலாம் எனவும், இலக்கு விலையை 2,330 ரூபாயாகவும் தரகு நிறுவனம் கணித்துள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

பங்குச்சந்தைய விடுங்க பிட்காயின் முதலீட்டாளர்கள் நிலைமை இன்னும் மோசம்..! ஈரான் போர் யாரையும் விட்டு வைக்கல..!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!



Click it and Unblock the Notifications