21 நாள் ஷட் டவுன் ஆனால் சென்செக்ஸ் செமயா ஏறுதே..! என்ன காரணம்..?

நேற்று 1,860 புள்ளிகள் ஏற்றம் கண்டு, கடந்த 10 வருடங்களில் இல்லாத மிகப் பெரிய ஒரு நாள் ஏற்றம் கண்டு நிமிர்ந்து நின்றது.

மீண்டும் இன்று சென்செக்ஸ் 1,410 புள்ளிகள் ஏற்றம் கண்டு முதலீட்டாளர்கள் வயிற்றில் பால் வார்த்து இருக்கிறது. ஏன் இப்படி சென்செக்ஸ் முரட்டுத் தனமாக ஏற்றம் காண்கிறது..? வாங்க பார்ப்போம்.

1. அமெரிக்காவின் 2 ட்ரில்லியன் டாலர்

1. அமெரிக்காவின் 2 ட்ரில்லியன் டாலர்

அமெரிக்கா தன் நாட்டு மக்களை கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்க சுமாராக 2 ட்ரில்லியன் டாலர் (150 லட்சம் கோடி ரூபாயை) உதவித் திட்டங்களாக அறிவிக்க இருக்கிறார்கள். இது ஒட்டு மொத்த உலக பங்குச் சந்தைகளின் டிரெண்டையும் பயங்கரமாக மாற்றி இருக்கிறது.

2. 1.70 லட்சம் கோடி

2. 1.70 லட்சம் கோடி

அமெரிக்காவைப் போல அத்தனை பிரம்மாண்டமான தொகையை அறிவிக்கவில்லை என்றால் கூட, இந்திய அரசு 1.70 லட்சம் கோடி ரூபாயை உதவித் திட்டங்களாக அறிவித்து இருக்கிறது. இந்த 1.7 லட்சம் கோடி ரூபாய் உதவித் திட்டங்கள், இன்று இந்திய பங்குச் சந்தைகளை குளிர வைத்து இருக்கிறது எனலாம்.

3. அமெரிக்க டாலர் பலவீனம்

3. அமெரிக்க டாலர் பலவீனம்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 76.3 ரூபாயைத் தொட்டது. ஆனால் இன்று சுமாராக 75.22 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. சுருக்கமாக இந்திய ரூபாய் மதிப்பு கொஞ்சம் தேறி இருக்கிறது. இதுவும் சந்தை உயர பக்க பலமாக இருந்து இருக்கிறது எனலாம்.

4. பெரியண்ணன்கள்

4. பெரியண்ணன்கள்

சில நாட்கள் முன்பு ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் 875 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருந்தன. ஆனால் இன்று மீண்டும் 1074 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இப்படி டிசிஎஸ், ஹெச் டி எஃப் சி, ஹெச் டி எஃப் சி பேங்க், இன்ஃபோசிஸ் போன்ற பங்குகளின் விலை மீண்டும் ஏறத் தொடங்கி, ஒட்டு மொத்த சந்தையையும் உயர்த்தி இருக்கிறது.

5. முதலீட்டாளர்கள் செண்டிமெண்ட்

5. முதலீட்டாளர்கள் செண்டிமெண்ட்

கொரோனா வருது பாரு... அதோ போச்சு... இதோ போச்சு... என பயந்து கொண்டிருந்த முதலீட்டாளர்கள் எல்லாம், இந்த விலை இறக்கத்தை ஒரு நல்ல வாய்ப்பாகப் பார்த்து வாங்கத் தொடங்கி இருக்கிறார்கள் எனலாம். எனவே பங்குச் சந்தையும் மேலே போகத் தொடங்கிவிட்டது.

6. உலக சந்தை

6. உலக சந்தை

இன்று மார்ச் 26, 2020 வர்த்தகமாகத் தொடங்கி இருக்கும் லண்டனின் எஃப் டி எஸ் இ 2.15 % சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிரான்சின் சி ஏ சி 1.82 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 2.36 % சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் பெரிய சரிவைக் காணவில்லை என்பது குறிப்பிந்

7. ஆசிய சந்தைகள்

7. ஆசிய சந்தைகள்

இன்று மார்ச் 25, 2020, ஆசியாவின் பெரும்பாலான சந்தைகளும் சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக ஜப்பானின் நிக்கி 4.51 % சரிந்து இருக்கிறது. இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் 10.19 % ஏற்றத்தில் வர்த்தகமானதும் குறிப்பிடத்தக்கது. இண்ட சர்வதேச சந்தைகளில் ஏற்ற இறக்கங்களும், இந்திய சந்தைகளும் ஏற்றத்துக்கு பலமாக இருந்து இருக்கிறது எனலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+