பஜார் ஸ்டைல் ரீடெய்ல் நிறுவனம் ஒரு சங்கிலித்தொடர் சில்லரை விற்பனை நிறுவனம். உயர்தர, மலிவு விலையில் ஆடைகள் மற்றும் வீட்டு பொருட்கள் விற்பனையாளராக விளங்குகிறது. கடந்த செப்டம்பரில் இந்நிறுவன பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.
இந்தியாவின் வாரன் பஃபெட் என்று அழைக்கப்பட்டவரும், பிரபல முதலீட்டாளருமான மறைந்த ஜூன்ஜூன்வாலாவின் மனைவி ரேகா ஜூன்ஜூன்வாலா இந்நிறுவனத்தில் 3.65 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளார். தற்போது இந்நிறுவன பங்கின் விலை அதன் ஐபிஓ விலையான ரூ.389ஐ காட்டிலும் குறைவாக உள்ளது.

பங்குச் சந்தையில் இப்பங்கு பட்டியலிடப்பட்ட செப்டம்பர் 6ம் தேதியன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை அதிகபட்சமாக 430.95ஐ எட்டியது. ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 18ம் தேதியன்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை இதுவரை இல்லாத குறைந்தபட்சமான ரூ.181.30க்கு சரிந்தது. இதனால் இந்த பங்கில் முதலீடு செய்தவர்கள் கலக்கம் அடைந்தனர்.
தற்போது இப்பங்கின் விலை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. இது முதலீட்டாளர்களுக்கு சிறிது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இந்நிலையில், ஆய்வு நிறுவனமான நுவாமா புரொஃபஷனல் கிளையண்ட்ஸ் குழுமம், பஜார் ஸ்டைல் ரீடெய்ல் நிறுவன பங்குக்கு "வாங்கலாம்" என்ற தரமதிப்பீட்டை வழங்கியுள்ளது.
மேலும் இப்பங்கின் இலக்கு விலையை ரூ.388ஆக நிர்ணயம் செய்துள்ளது. இது இந்நிறுவன பங்கின் முந்தைய வர்த்தக தினத்தின் இறுதி விலையிலிருந்து (ரூ.226.50) சுமார் 72 சதவீத உயர்வை குறிக்கிறது.
நுவாமா புரொஃபஷனல் கிளையண்ட்ஸ் குழுமத்தின் பலாஷ் கவாலே வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மதிப்ப சில்லரை விற்பனையாளர்களில் பஜார் ஸ்டைல் ரீடெய்ல் ஒன்றாகும். இது இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள புதிய நடுத்தர வர்த்தகத்தினரின் தேவையை பூர்த்தி செய்கிறது.
சிறந்த கடைப் பொருளாதாரம், தீவிர வளர்ச்சி திட்டங்கள் (ஆண்டுக்கு 40-50 கடைகள் தொடங்குதல்) மற்றும் வாய்ப்பின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீட்டு மறுமதிப்பீட்டிற்கு பங்கு ஒரு வலுவான வேட்பாளர் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தார்.
2013-14ம் நிதியாண்டில் பஜார் ஸ்டைல் ரீடெய்ல் இரண்டு கடைகளுடன் தனது வர்த்தகத்தை மேற்கொண்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இந்நிறுவனம் தனது வர்த்தகத்தை பெரிய அளவில் விரிவுப்படுத்தியுள்ளது. தற்போது இந்நிறுவனத்துக்கு மொத்தம் 213 விற்பனை நிலையங்கள் உள்ளன.
இந்நிறுவனம் 2024 செப்டம்பர் காலாண்டில் வருவாயாக ரூ.310.91 கோடி ஈட்டியிருந்தது. ஆனால் அந்த காலாண்டில் இந்நிறுவனத்துக்கு ரூ.8.89 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது. இருப்பினும் கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.412 கோடி ஈட்டியது மேலும் நிகர லாபமாக ரூ.30.42 கோடி ஈட்டியுள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications